Tuesday, November 20, 2012

பாரீஸில் பின்லேடன் பெயர் பதித்த டி சர்ட் வாங்கிய கால்பந்தாட்ட ரசிகர் திடீர் கைது.


Bin Laden shirt sends footballer to cour

ஒசாமா பின்லேடன் பெயர் பதித்த டி ஷர்ட் வாங்கிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தீவிரவாத ஆதரவாளர் என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சாம்ஸ்எலிசீஸ் ஷாப்பிங் பகுதியில், சில நாட்களுக்கு முன் 21 வயது வாலிபர் சென்றார். இவர் கால்பந்தாட்ட ரசிகர். தனக்கு பிடித்த பாரிஸ் செயின்ட்ஜெர்மெய்ன் டி ஷர்ட்டை ஒரு கடையில் வாங்கினார். அந்த டி ஷர்ட்டின் பின்புறம் அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் பெயர் பதிக்கப்பட்டிருந்தது.

டி ஷர்ட் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் வாலிபர். அதற்குள் போலீசுக்கு போன் செய்த கடை ஊழியர், ஒசாமாவின் நினைவாக டி ஷர்ட் வாங்குவதாக வாலிபர் கூறினார் என்று கூறினார். உஷாரான போலீசார் வழியில் வாலிபரை கைது செய்தனர். தீவிரவாத ஆதரவாளர் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நேற்று நடந்தது.

அப்போது வாலிபரை போலீசார் ஆஜர்படுத்தினர். ஒசாமாவுக்கு ஆதரவு எதுவும் நான் தெரிவிக்கவில்லை. ஜோக்குக்காக அவர் பெயர் போட்ட டி ஷர்ட் வாங்கினேன். இதைவிட மோசமான டி ஷர்ட்களை நான் பார்த்திருக்கிறேன். ஹிட்லர் படம் போட்ட டிஷர்ட்கள் ஏராளமாக வந்துள்ளன என்றார். இதுதொடர்பான வழக்கில் டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட வாலிபரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.


:::::::::::::::.thedipaar.com::::::::::::::

No comments:

Post a Comment