58 ஆவது பொது நலவாய பாராளுமன்ற பிரதான மாநாடு இன்று (11) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக அரங்கில் நடைபெறும், இந்த மாநாட்டில் 58 நாடுகளைச் சேர்ந்த 800 பேருக்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
58 ஆவது பொது நலவாய பாராளுமன்ற மாநாடு கடந்த வெள்ளியன்று ஆரம்பமாகி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. கடந்த சனிக்கிழமை பொது நலவாய பாராளுமன்ற செயற்குழு கூட்டம் நடைபெற்றதோடு நேற்று முன்தினம் பொது நலவாய பெண் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.
இதேவேளை நேற்று பொது நலவாய அமைப்பிலுள்ள சிறிய நாடுகளின் அமர்வுகள் நடைபெற்றன. இதன் போது அந்த நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி, பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது உட்பட பல முக்கிய தலைப்புகளில் கூட்டங்கள் இடம்பெற்றன.
இந்த கூட்டங்கள் பிரின்ஸ் எட்வட்தீவு எம். பி. போல் பிக்கர் குவர்னேசே நாட்டு எம்.பி.ஆகியோரின் தலைமையில் நடைபெற்றன.
பேர்மூடா, மாலைதீவு, பகாமாஸ், சென் லூசியா அங்கோலா, உட்பட 20 ற்கும் அதிகமான நாட்டு எம்.பி.கள் பங்கேற்றனர்.
பொது நலவாய பாராளுமன்ற நிறைவேற்று குழு கூட்டம் பொது நலவாய பாராளுமன்ற செயலாளர் நாயகம் வில்லியம் சிஜா தலைமையில் நடைபெற்றது.
இதேவேளை பொது நலவாய பாராளுமன்ற தலைவர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று நடைபெறும். ஆரம்ப நிகழ்வை தொடர்ந்து பிராந்திய ரீதியிலான கூட்டங்கள் இடம்பெறும்.
No comments:
Post a Comment