மிருக பலியை பூஜையை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என சிலாபம் மாவட்ட நீதிமன்றம் இன்று (11) அறிவித்துள்ளது.
முன்னேஸ்வரம் காளி கோயில் மிருக பலி பூஜையை நிறுத்தும்படி உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்றை பரிசீலித்த நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.
ஆனால் சட்டவிரோதமாக விலங்கு கொலை இடம்பெற்றால் கொலை சட்டத்தின் 17வது சரத்துபடி சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதென நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றின் இந்த அறிவிப்பின் மூலம் சமய உரிமைகள் மூலம் மிருக பலியிடலாம் என்ற கருத்து நிராகரிக்கப்படும் என மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
மிருக பலி மேற்கொள்வதானால் அதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அப்படியல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment