அமெரிக்காவின் கடன் சுமை 16 லட்சம் கோடி டாலரை (ரூ.894 லட்சம் கோடி) எட்டி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை அதிபருக்கு போட்டியிடும் பால் ரயன், லோவாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியது: கடன் சுமை அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்.
இது அதிபர் ஒபாமா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டது. இந்த கடன் சுமை வேலை வாய்ப்பு பிரச்னையை உருவாக்கி விட்டுள்ளது. மேலும், நமது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு எதிர்காலம் குறித்த பயத்தை உருவாக்கி உள்ளது.
அமெரிக்காவை வழிநடந்த எங்கள் கட்சி அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னிக்கு வாக்களித்தால் இந்த சூழ்நிலை மாறும். செலவுகளை குறைத்தும், பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியும் தருவோம் என்றார் பால் ரயன்.
மிட் ரோம்னி தேர்தல் பிரசார குழுவின் செய்தித் தொடர்பாளர் ரியான் வில்லியம்ஸ் கூறுகையில், ஒபாமா பதவியேற்ற பின்னர் வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதார தேக்கம் போன்றவை வந்துவிட்டது. நாட்டின் அபரிமித கடன் சுமை எதிர்கால சந்ததிகளை துயரத்துக்கு ஆளாக்கி விட்டுள்ளது என்றார்.
செனட் பட்ஜெட் குழுவின் உறுப்பினரும், செனட்டருமான ஜான் கார்னின் கூறுகையில், கடன் சுமை நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் கீழ்நிலைக்கு தள்ளிவிட்டது.
ஒபாமா நிர்வாகத்தில் இது மற்றுமொரு வெட்கக் கேடான நிகழ்வு. தலைமை மாறுவதுதான் இதற்கு சரியான தீர்வு என்றார்.
நாடாளுமன்ற குடியரசு கட்சியின் அரசியல் குழுத் தலைவர் டாம் பிரைஸ் கூறியது: கடந்த 40 ஆண்டுகளாக இருந்த கடன் சுமையை விட இப்போது கடன் சுமை அதிகரித்துவிட்டது.
அமெரிக்க வரலாற்றில் ஒரு முறை அதிபராக இருந்தவர்களால் உருவான கடன் சுமைகளில் இதுதான் பெரிய தொகை. மேலும், 2 கோடி அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். கடந்த 42 மாதங்களில் வேலை வாய்ப்பின்மை 8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.
குடியரசு கட்சியின் செனட்டர் பாப் கார்கர் கூறியது: நாட்டின் கடன் சுமை 16 லட்சம் கோடி டாலரை (ரூ.894 லட்சம் கோடி) எட்டி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தனியார் முதலீட்டை பெருக்குவதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். பொருளாதாரமும் வளரும். இதற்கு தேர்தலில் எங்களை (குடியரசு கட்சி) ஆதரிக்க வேண்டும் என்றா
No comments:
Post a Comment