Thursday, August 9, 2012

What is LPG: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன?

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன்களில் திரவமாக மாற்றப்பட்டு இருப்பதே ஆகும். எளிதில் சேமிக்கவும்,எளிதில் எடுத்துச்செல்லுவதற்கு ஏற்றவாறு இவ்வாறு செய்யப்படுகிறது. இவை இயற்கை வாயு அல்லது கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும்போதும் பெறப்படுகின்றன.பியூட்டேன் மற்றும் புரொப்பேன் போன்றவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவிலுள்ள முக்கியமான ஹைட்ரோகார்பன்களாகும். மற்ற ஹைட்ரோகார்பன்களான ஐசோ பியூட்டேன், பியூட்டலின், புரொப்பைலீன் மற்றும் என்-பியூட்டேன் போன்றவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவில் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும்.


திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவின் (LPG) உபயோகங்கள் என்ன?

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பாதுகாப்பான, சிக்கனமான,சுற்றுப்புறசூழலுக்கு ஏற்ற, ஆரோக்கியமான சமையலுக்கு ஏற்ற எரிபொருளாகும்.பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி இந்த எரிவாயு பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிகரீதியான உபயோகத்திற்கும் ஏற்ற நல்ல எரிபொருளாகும்.


திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பாதுகாப்பான, சிக்கனமான,சுற்றுப்புறசூழலுக்கு ஏற்ற, ஆரோக்கியமான சமையலுக்கு ஏற்ற எரிபொருளாகும்.பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி இந்த எரிவாயு பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிகரீதியான உபயோகத்திற்கும் ஏற்ற நல்ல எரிபொருளாகும்.

சந்தையில் கிடைக்கும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியவாயு (LPG) சிலிண்டர்கள் அளவுகள் என்ன?
 
பொதுவாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்கள் கிராமப்புற பகுதிகளுக்கும், மலைப்பிரதேசங்களுக்கும் தொலைதூரப்பகுதிகளுக்கும் ஏற்றவாறு5 கிலோ எடையிலும், பொது உபயோகத்திற்காக 14.2 கிலோ எடையிலும் கிடைக்கிறது.வணிகரீதியான மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு 19 கிலோ மற்றும் 47.5கிலோவில் இவ்வாயு சிலிண்டர்கள் கிடைக்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் 12கிலோ எடை கொண்ட இந்த எரிவாயு சிலிண்டர்களை பொது உபயோகத்திற்காக விற்கின்றன

No comments:

Post a Comment