இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன்படுத்திப் பார்ப்பது என் பழக்கம். அந்த வகையில் சென்ற வாரம் தரப்பட்ட இரண்டு புரோகிராம்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்கவும் மிக எளிதாகவும் உள்ளன. வேகமாகவும் செயல்படுகின்றன.
ஆடியோ பைல்கள் பல பார்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் இவை உள்ளன. இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். பெரும்பாலான ஆடியோ இயக்கும் புரோகிராம்கள், அனைத்தையும் இயக்கு வதில்லை. எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன், விண்டோஸ் இதனை இயக்க புரோகிராமà � ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஆடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.
இந்த இலவச ஆடியோ கன்வர்டர் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரிhttp://www.freemake.com/free_audio_converter/. மேலே குறிப்பிட்ட அனைத்து பார்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு, நமக்குத் தேவையான பார்மட்டில் மாற்றித் தருகிறது.இதே போல பல வீடியோ பார்மட் பைல்களில் இருந்து, ஆடியோவினை மட்டும் பிரித்தெடுத்து, நாம் குறிப்பிடும் பைல் பார்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG பார்மட் பைல்களில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.
பார்மட் மாற்றிய ஆடியோ பைல்களை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும், அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான பார்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆடியோ பைல்களை இணைக்கலாம்.
இதே நிறுவனம் வீடியோ பார்மட்களை மாற்றித் தரும் வீடியோ கன்வர்டர் புரோகிராமினையும் (Freemake Video Converter.) கொண்டுள்ளது. இதுவும் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறப்பாக இயங்குகிறது. இந்த புரோகிராம் http://www.freemake.com/free_video _converter/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. , AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS ஆகிய பார்மட் வீடியோக்களை இது கையாள்கிறது. டிவிடிக்களில் இருந்து வீடியோ பைல்களைப் பிரித்து தனி பைலாக்கித் தருகிறது. YouTube, Facebook, MTV, Vimeo, Dailymotion, ComedyCentral போன்ற 50 க்கும் மேற்பட்ட இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் வீடியோ பைல்களை மாற்றித் தருகிறது.
இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, வீடியோ, போட்டோ ஸ்லைட் ஷோ, எம்பி3 ஆகிய பைல்களை யு-ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் எம்பி3 பைல்களைக் கொண்டு இந்த புரோகிராம் மூலம் ஸ்லைட் ஷோக்களை உருவாக்கலாம். பல வீடியோ பைல்களை இணைக்கலாம்.
இந்த ஒரு வீடியோ கன்வர்டர் புரோகிராம் தான், CUDA மற்றும் DXVA ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக, இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு புரோகிராம்களும் விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகின்றன.
இந்த ஒரு வீடியோ கன்வர்டர் புரோகிராம் தான், CUDA மற்றும் DXVA ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக, இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு புரோகிராம்களும் விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகின்றன.
No comments:
Post a Comment