Thursday, August 9, 2012

கொண்டைக்கடலை குழம்பு

                                       Chickpeas Gravy




வீட்டில் தினமும் சாம்பார் செய்து சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அப்போது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் கொண்டைக்கடலையை வைத்து குழம்பு போல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக அருமையாக இருக்கும். அத்தகைய கொண்டைக்கடலை குழம்பை எப்படி செய்துதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை - 150 கிராம்
கத்தரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 3
குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 3
முந்திரி பருப்பு - 2
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
புளி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவிலேயே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு மறுநாள் குக்கரை அடுப்பில் வைத்து, ஒரு பாத்திரத்தில் கடலையை கழுவி, தண்ணீர் விட்டு சிறிது உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம், தக்காளியை நன்கு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரி, சோம்பு போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு அதில் கத்தரிக்காயை போட்டு நன்கு வேகவிட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதில் விட்டு, உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து, வேண்டுமென்றால் உப்பு போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
பின் பச்சை வாசனை போனதும், புளியை நன்கு கரைத்து, அந்த நீரை குழம்பில் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி விடவும்.
இப்போது சுவையான கொண்டைக்கடலை குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment