நினைவுத்திறன் குறைபாடு என்பது இன்றைக்கு பெரும்பாலான முதியவர்களை பாதிக்கிறது. அல்சீமர் எனப்படும் இந்தநோயை தடுக்க இதயத்தை பத்திரமாக பாதுகாக்கவேண்டும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மறதி நோய் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர் அர்ச்சனா சிங் தலைமையில் இது குறித்த ஆய்வு மேற்கொண்டன.
மறதி நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
உடலில் நல்ல கொழுப்புகள் அதிகம் இருந்தால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேசமயம் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி அவை ரத்தநாளங்களில் படிந்து இதயநோய்களை ஏற்படுத்துகின்றன. இதனால் நோய் குறித்த எண்ணமே மூளையை பாதிக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதயத்தை பாதுகாப்பதோடு மூளையையும் ஆரோக்கியமாக வைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
பொதுவாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது இதயம்தான். இதே நினைப்பு மூளைச்செயல்பாட்டையும் பாதிக்கும். இதயம், மூளை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் அனைத்து பாதிப்புகளுக்கும் எளிதில் நிவாரணம் உறுதி என்கின்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment