புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் "ஏ" சிறந்த முறையில் செயலாற்றுவதாக இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பை புற்றுநோய் சிகிச்சையில் "புதிய உதயம்" என்றே இவர்கள் வர்ணிக்கின்றனர்.
கேன்சர் உருவக்காக் கூறுகளுக்கும், வைட்டமின் ஏ பற்றாக்குறைக்கும் தொடர்பிருப்பதாக இவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் புற்றுநோய் நீக சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப்பொருட்களில் வைட்டமின் ஏ நிரம்பிய சத்துக்களை சேர்க்குமாறு இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புரோஸ்டேட் கேன்சர் செல்கள் மீது நடத்திய ஆய்வில் இவர்கள் இந்த வைட்டமின் ஏ தொடர்பை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் யார்க் பல்கலை. பேராசிரியர், நார்மன் மெய்ட்லேன்ட் இதனை மற்ற கேன்சர்களுக்கும் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.
உடனே மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று வைட்டமின் ஏ மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்ளவேன்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏனெனில் மாத்திரை வடிவங்களில் ஓவர் டோஸ் ஆனால் அதுவே நச்சாகவும் கேன்சர் உருவாக்க காரணைகளாகவும் மாறிவிடும் என்று இவர் எச்சரித்துள்ளார்.
மாறாக தின்சரை உணவில் வைட்டமின் ஏ உள்ள எண்ணெய்ச் சத்துள்ள மீன், கேரட்கள், லிவர், சிகப்பு மிளகு, மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும் என்கிறார் இவர்.
புற்று நோய் உருவாகி விட்டாலும் சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தினால் அது பரவுவதை திறம்பட தடுக்க முடியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஏற்கனவே கேன்சர் சிகிச்சையில் 'ரெடினாய்க் ஆசிட்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கேன்சர் நோய் வருவதால் ஏற்படும் இறப்பை 80% தடுக்க முடிகிறது என்று கூறியுள்ளது இந்த ஆய்வு.
பொதுவாக 'புரோஸ்டேட் கேன்சர்' காரணிகளை ஆராயும் போது ரத்தத்தில் வைட்டமின் ஏ அளவு குறைவாக இருப்பதை ரத்த மாதிரிகளில் கண்டிருக்கின்றனர். ஆனால் இதன் செயல்பாட்டை யாரும் தெரிவிக்கவில்லை. இப்போது உயிரியல் தொடர்பை இந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முழு விவரம் 'நியூக்ளீக் ஆசிட்" என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment