நீங்கள் சாக்லேட்டுகளுக்கு அடிமையா? ஆம் என்றால் ஓபியம் எவ்வாறு போதை அடிமையாக்குகிறதோ அதற்கு சமம் ஆன போதைப்பொருள் விளைவையே மூளையில் சாக்லேட்டுகளும் ஏற்படுத்துகின்றன என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை ஆய்வு இந்த ஒப்பு நோக்கு ஆய்வை நிகழ்த்தியுள்ளது. மேலும் உடல் பருமனுக்கும் போதை மருந்து அடிமைத்தனத்திற்கும் கூட தொடர்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எலிகளை வைத்து சாக்கலேட்டுகளைக் கொடுத்து பரிசோதனை நடத்தியதில் ஓபியத்திற்கு இணையாக மூளையில் சுரக்கும் 'என்கெபாலின்' என்ற ரசாயனம் அதிக அளவில் சுரப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மூளையில் சுரக்கும் என்கெபாலின் என்ற ரசாயனம் மூலக்கூறு ரிசெப்டார்களுடன் பிணைந்து ஓபியம் செய்யும் வேலைகளான வலியைக் குறைப்பது, மற்றும் இன்பமான உணர்வுகளை ஏற்படுத்துவது போன்றவற்றைச் செய்கிறது.
மேலும் இந்த ரசாயனத்தை வெளிப்படுத்தும் மூளையின் அந்தப் பகுதி மருந்துகள் மூலம் உணர்வடையச்செய்யும்போது சாக்கலேட்டுகளுக்கான தேவை இரட்டை மடங்காகிறது என்பதும் இந்த எலிப்பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடற்பருமன் நோய் உள்ளவர்களுக்கு உணவைப்பார்த்தாலே மூளையின் என்கெபாலின் அதிகம் சுரக்கத் தொடங்குகிறது. அதேபோல்தான் போதை மருந்துக்கு அடிமையாபவர்களும் போதை மருந்தின் தன்மை இருக்கும் பொருட்களைப் பார்த்தாலே இந்த மூளை திரவம் அதிகம் சுரக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
சாக்லேட்டுகளுக்கு அடிமையாகியிருப்பவர்களுக்கும் இதே போன்ற பிரச்சனை உள்ளது என்பதே இந்த ஆய்வின் ஒப்பு நோக்குத் தன்மை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கண்டுபிடிப்புகள் அமெரிக்க இதழான 'கரண்ட் பயலாஜி' -யில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment