Monday, September 24, 2012

திபெத், இமாலயப் பனிமலைகள் அதிவேகமாக உருகி வருகின்றன





திபெத் பீடபூமியில் உள்ள பெரும்பாலான பனிமலைகளில் பனி அதிவேகமாக உருகி வருவதாக கடந்த 30 ஆண்டுகால ஆய்வுகளை மேற்கொண்ட சீன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு ஆய்வு தெரிவித்தது போல் திபெத் பனிமலைகள் வளர்ந்து வருகின்றன என்பது முற்றிலும் தவறு என்று தற்போது தெரியவந்துள்ளதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீன பனி மலை ஆய்வாளர்களின் இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் விஞ்ஞான இதழான நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்பதில் விரிவாக வெளியாகியுள்ளது.

திபெத் பீடபூமி என்பதிலிருந்து உருவாகும் மலைத்தொடர்கள்தான் இமாலயம், காரகோரம், பாமீர், மற்றும் கிலியன் ஆகியவையாகும். இவை அனைத்தும் சேர்ந்து ஒரு லட்சம் சதுர கில்மோமீட்டர் பரப்புடையது. இந்தப் பனிமலைகளின் மூலம் ஆசியாவில் உள்ள 1.4 பில்லியன் மக்கள் தொகைக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.

இங்கிருந்துதான் கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதி, மேகாங், யாங்சீ போன்ற மிகப்பெரிய நதிகள் பூமியை நனைக்கின்றன. மிகப்பெரிய அளவில் புதிதான நீரை வழங்கி வரும் இதனை 'பூமியின் 3வது துருவம்' என்றே விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

தற்போது உலகவெப்பமயமாதலினால் இந்த பனிப்பிரதேசங்களுக்கு ஆபத்து விளைந்துள்ளது.

சீன ஆய்வாளர்கள் சுமார் 7,100 பனிச்சிகரங்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக முக்கியமான 15 பனிமலைகளை நேரடியாக ஆய்வு செய்தனர். இதில் கண்ட உண்மை என்னவெனில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பனிச்சிகரங்களில் பனி வற்றி வருகிறது.

பனி உருகுகிறது ஆனால் புதிய பனிப்படலங்கள் உருவாவதில்லை. இதனால் பனி வற்றிய மலைகளாக இவை ஆகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக இந்த பனிமலைத் தொடர்களில் காரகோரம் உள்ளிட்ட மற்ற சிகரங்களை விட இமயமலைப் பனிப்பாறைகள் விரைவில் பனியற்றதாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏன் இமாலயத்தில் மட்டும் அதிவேகமாக பனி வற்றிப்போகிறது என்றால் காற்றுதான் காரணம் என்று கூறுகின்றனர்.

இந்திய பருவநிலைகள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக மாறிவருவதால் அதனை நம்பியிருக்கும் இமாலயப் பனிமலைகள் உருகுவதும் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆவ்ய்கள் மேலும் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிடவுள்ளன.

No comments:

Post a Comment