புதிய அப்ளிக்கேஷன் சென்டரை வழங்கும் ஃபேஸ்புக்!
July 10, 2012, 11:14 [IST]
|
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் புதிய அப்ளிக்கேஷன் சென்டரை இந்தியாவிலும் அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் மட்டும் அல்லாமல் இன்னும் பிற நாடுகளிலும் வழங்க இருக்கிறது.
ஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் இந்த அப்ளிக்கேஷன் சென்டரை ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தலாம்.
ஃபேஸ்புக்கில் நிறைய அப்ளிக்கேஷன்கள் உள்ளது. ஆனால் அந்த அப்ளிக்கேஷன் பற்றிய விவரம் சரிவர மக்களுக்கு தெரிய வரவில்லை.
இதனால் ஃபேஸ்புக் புதிய அப்ளிக்கேஷன் சென்டரை உருவாக்கி உள்ளது. இந்த சென்டர் மூலம் எந்த ஃபேஸ்புக் அப்ளிக்கேஷன்களையும் எளிதாக பயன்படுத்தலாம்.
தற்பொழுது இந்த அப்ளிக்கேஷன் சென்டர் அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த அப்ளிக்கேஷன் சென்டர் இந்தியாவை உள்ளிட்டு பிரேஸில், ரஸியா, ஸ்பெயின், தய்வான், துருக்கி, பிரெஞ்சு, ஜெர்மெனி ஆகிய நாடுகளிலும் வரும் வாரங்களில் வழங்கப்பட உள்ளது.
இந்த அப்ளிக்கேஷன் சென்டர் ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அப்ளிக்கேஷன் சென்டரை வழங்குவதாக நேற்று ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது. இந்த அப்ளிக்கேஷன் சென்டரில் கிட்டதட்ட 600 அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்யலாம்
.
.
No comments:
Post a Comment