நூறு வருடங்களாக ஒளிரும் மின்குமிழ்
பிரித்தானியாவில் கடந்த நூறு வருடங்களாக மின்குமிழ் ஒன்று தொடர்ச்சியாக ஒளிர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
1912 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் நுழைவாயில் மண்டபம் ஒன்றில் இந்த மின்குமிழ் பொருத்தப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
டைட்டானிக் கப்பல் மூழ்கடிப்பட்டு சில நாட்களின் பின்னர் இந்த மின்குமிழ் பொருத்தப்பட்டுள்ளது.
ஆயிரம் மணித்தியாலங்கள் ஒளிரக்கூடியது எதிர்பார்க்கப்பட்ட இந்த மின்குமிழ் நூறுவருடங்களை எட்டியுள்ளது. 1912 ஆம் ஆண்டே இந்த மின்குமிழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
எனினும் மிக நீண்டகாலமாக ஒளிரும் மின்குமிழ் ஒன்று 2008 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.இந்த மின்குமிழ் 1895 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment