மஸ்ரூம் லாம்ப் மிகவும் ருசியான ஒரு டிஸ். இதை செய்வது மிகவும் ஈஸி. இதை பிக்னிக் போகும் போது செய்து எடுத்து சென்றால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுவையுடையது. இதை விடுமுறை காலங்களில் வீட்டில் உள்ளோரை அசத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்தால், இதன் அலாதியான சுவையால் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கறி - 8 பீஸ் (எலும்புடன் கூடிய கறி)
பட்டன் காளான் - 1 பாக்கெட்
மிளகுத்தூள் - 1½ டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கார்ன் ப்ளார் - 3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பட்டன் காளான் - 1 பாக்கெட்
மிளகுத்தூள் - 1½ டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கார்ன் ப்ளார் - 3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் காளான் மற்றும் ஆட்டுக்கறியை நன்கு கழுவி கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, தீயை குறைத்து கழுவிய ஆட்டுக்கறியை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு அதில் பட்டன் காளானைப் போட்டு, 2-3 நிமிடம் வறுக்கவும். பின் அதில் மிளகுத்தூள், மிளகாய் தூள், சோயா சாஸ், இஞ்சிபூண்டு விழுது, சர்க்கரை மற்றும் உப்பு போட்டு நன்கு பிரட்டவும்.
பின்னர் கார்ன் ப்ளாரை தண்ணீரில் கரைத்து, அதில் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு நன்கு கொதித்து மசாலா அனைத்தும் நன்கு கறியில் சேர்ந்ததும், அதனை இறக்கிவிடவும்.
பின்னர் அதில் நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு ஒருமுறை பிரட்டி விடவும்.
இப்போது சுவையான, அருமையான மஸ்ரூம் லாம்ப் (மட்டன்) ரெடி!!
No comments:
Post a Comment