ஈவினிங் நேரங்களில், மழை பெய்யும் பொழுது, காரசாரமாகவும், கொஞ்சம் மொறுமொறுவென்றும் சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். அந்த வகையான, உடலுக்கு சத்துக்களை வழங்கும் வகையில் இருப்பதுமான முட்டையை வைத்து ஒரு ரெசிபி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதற்கு முட்டை சாப்ஸ் தான் சிறந்தது. அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
கார்ன் ப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 1/2 கட்டு
பிரட் தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். முட்டை வெந்த பிறகு ஓட்டை அகற்றி, அதனை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.
பிறகு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கார்ன் ப்ளார், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்பு அதில் அரை கப் தண்ணீரை விட்டு, கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு, காய வைத்துக் கொள்ளவும்.
பிறகு வெட்டி வைத்துள்ள அந்த முட்டையை கலவையில் நனைத்து, பின் பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான முட்டை சாப்ஸ் ரெடி!!! இதனை தக்காளி சாஸ்-உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment