தாய்லாந்து நாட்டில் யானைக் கழிவில் இருந்து கிடைக்கும் காபிக் கொட்டையைக் கொண்டு ஸ்பெசல் காபி தயாரித்து தருகின்றனர். இது மூலிகை காபியாக இங்கு பருகத் தரப்படுகிறது. ஒரு கப் காபி மூவாயிரம் ரூபாய்தான் என்கின்றனர் இந்த காபி விற்பனையாளர்கள். இந்த காபி சாப்பிட்டால் யானை பலம் வருமாம். இதற்காகவே ஆர்டர் கொடுத்து சாப்பிடுகின்றனர் இந்த காபி பிரியர்கள். எப்படி இந்த காபி கிடைக்கிறது தெரிந்து கொள்ளுங்களேன்.
இப்போது யானையின் கழிவில் இருந்து காபியே தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிளாக் ஐவரி காபி என்ற பெயர் கொண்ட இந்த காபியை தாய்லாந்தில் தயாரிக்கின்றனர்.விலை ஒரு கப் ஜஸ்ட் 3000 ரூபாய்தான்.
ஸ்பெசல் கவனிப்பில் யானைகள்
தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் இந்நாட்டுடன் லாவோஸ், மியான்மர் நாட்டு எல்லைகள் சந்திக்கும் இடம் கோல்டன் டிரையாங்கிள். மலைப்பாங்கான பகுதி மூலிகைளுக்கு பிரசித்தி பெற்ற இடம். இங்கு இத்தகைய காபி தயாரிப்பதற்காகவே ஸ்பெஷல் கவனிப்புடன் யானைகள்
வளர்க்கப்ப டுகின்றன.
காபி கொட்டைகள் தீவனம்
யானைகளுக்கு புல், வாழைப்பழம், கரும்பு ஆகியவற்றுடன் காபி கொட்டைகளையும் தீவனமாக உண்ணக் கொடுக்கின்றனர்.அந்த காபி கொட்டைகள் யானையின் வயிற்றில் 15 முதல் 30 மணி நேரம் வரை ஜீரணமாகிறது. அப்போது உணவு நொதித்தல் காரணமாக அந்த கொட்டைகளில் சுவை கூடுகிறது.
சாணத்தில் இருந்து பிரிக்கப்படும் கொட்டைகள்
இதன்பின்னர் யானை வெளியேற்றும் சாணியில் செரிக்காமல் வெளியேறியிருக்கும் காபி கொட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. 33 கிலோ கொட்டைகளை யானை உண்டால் ஒரு கிலோ காபி கொட்டை மட்டுமே கிடைக்கும். இதன் விலை ஒரு கிலோ 60,000 ரூபாயாம்.
விலை அதிகம்தான்
குறைவான அளவு காபி கொட்டைகள் கிடைப்பதால்தான் அதன் விலை மிக அதிகமாகிறது. இந்த கொட்டைகளை வறுத்து, அரைத்து தயாராவதுதான் பிளாக் ஐவரி காபி. இதை அருந்துவதால் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றும் ‘யானை பலம்' கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்!
ஒரு கப் ஜஸ்ட் 3ஆயிரம் ரூபாய்தான்
இந்த பிளாக் ஐவரி காபி வடக்கு தாய்லாந்து, மாலத்தீவு மற்றும் அபுதாபியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இந்த காபி கிடைக்கிறது. ஒரு கப் 3000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
source: http://www.nbcnews.com/travel/itineraries/elephant-dung-coffee-exotic-brew-50-pop-1C7490082
No comments:
Post a Comment