Tuesday, December 11, 2012

“இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”:கார்ல் மார்க்சின் சிலிர்க்க வைக்கிற காதல் ...!




சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறியிருந்த ஒருவர் உலகம் போற்றும் ஒரு மிகப்பெரிய மேதையாக உருவாகினர் என்றால் அதற்கு ஒரு இனிய காதலே.....காரணமாய் போனது...
உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக…மார்க்ஸ் தன் காதலி  ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.பற்றி வர்ணிக்கிற வரிகள்....
ஜென்னியைப் பார்ப்பவர்கள் இவளைத் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்குவார்கள். ஜென்னி பரம்பரை பிரபு வம்சத்தைச் சேர்ந்தவளாக இருந்ததால் பிறப்பிலேயே தேவதையைப்போல் இருந்தாள். அழகு மட்டுமல்ல. வீட்டுக்கு மூத்தவளாக இருந்ததால்குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தாள். அனைவரிடமும் கனிவுடன் பழகும் குணவதியாக இருந்தாள். அங்காடித் தெருக்களுக்கும் திருச்சபைக்கும் ஜென்னி வரும்போதுஅவளது பார்வை நம் மீது படாதாஎன்று விடலைகள் ஏங்குவர். மார்க்ஸ் யூதர்களுக்கே உண்டான கருமை நிறம் அறிஞர் ஆவதற்கான எந்தவிதமான அறிகுறியும் தோற்றத்தில் இல்லாதவன்.

ஜென்னிக்கும் மார்க்சுக்கும் காதல் ஏற்பட்டது என்றால் நம்பமுடிகிறதா ஜென்னி இருவருக்கும் காதல் ஏற்பட காரணமாக இருந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் ஜென்னியின் தோழி சோபியா. இவள் மார்க்சின் சகோதரி. இரண்டாவது ஜென்னியின் தந்தை லட்விக் வெஸ்ட்பாலென். மூன்றாவது "ஷேக்ஸ்பியர்".

ஜென்னியின் வீடும் மார்க்சின் வீடும் அருகருகில் இருந்ததால் இருவரின் குடும்பமும் நெருங்கிப் பழகிவந்தது. ஜென்னியின் முன்னோர்கள் பணக்காரர்கள். ராணுவம்மற்றும் அரசு வேலை செய்தவர்கள என்பதாலும் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததாலும் நிரந்தர வருமானமும் ஆஸ்தியும் இருந்தன. கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1814ல் ஜென்னி பிறந்தாள்.

லட்விக் லான் வெஸ்ட் பாலென்னுக்கு மார்க்சின் மீது அலாதிப்பிரியம் இருந்தது. லட்விக்கலை ஆர்வம் நிரம்பியவராக இருந்தார். மார்க்சை அழைத்து கிரேக்க காவியங்கள்: ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஆகியவற்றை விவாதிப்பார். மார்க்ஸ்-ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உணர்ச்சிப் பூர்வமாக நடித்துக் காட்டுவார். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும்.இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.
 மார்க்சுக்கு' ஜென்னியின் மீது காதல் பிறந்தது. ஜென்னியின் மீது இருந்த காதலை மார்க்ஸ் உடனடியாக வெளிப்படுத்தவில்லை. ஜென்னி தனது காதலை ஒத்துக் கொள்வாளா என்ற சந்தேகம் மார்க்சுக்கு இருந்தது. ஆனால் ஜென்னி மார்க்சின் மேல் இருந்த காதலை மூடி மறைக்கவில்லை

மார்க்சின் உறுதியான மனப்பான்மைஅடக்கியாளும் தன்மை ஒழுக்கத்திற்கு உயர்வு கொடுத்துப் பேசுகிற தன்மை ஆகியவை ஜென்னியை கவர்ந்தன.
1836 ஆம் ஆண்டு ஜென்னியும் மார்க்சும் திருமணம் செய்து கொள்ள ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர். மார்க்ஸ் ஜென்னியில் காதல் விவகாரம் மார்க்சின் தந்தை லுட்விக்கு தெரிந்தது. அவருக்கு மார்க்சின் மீது கவலை அதிகரித்தது. ஒரு மத்திய தர குடும்பத்தை சேர்ந்த நமது மகனுக்கு ஜென்னி கிடைப்பாளா இந்த விவகாரம் ஜென்னியின் தந்தைக்கு தெரிந்தால் என்னவாகும் என்றெல்லாம் கவலை அதிகரித்தது. ஆனால் மார்க்ஸ் ஒரு பிடிவாதக்காரன். எதைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறானோ அதை செய்து முடித்துவிடுவான் என்பதில் நம்பிக்கை இருந்தது

1836ல் கார்ல் மார்க்ஸ் தனது மேல் படிப்பிற்காக பெர்லின் சர்வகலா சாலைக்கு சென்றார். நன்றாக படித்துதான் சுயமாக சம்பாதிக்கும் திறன் ஏற்படும் வரையில் திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை என்று இருவரும் சங்கல்பம் செய்து கொண்டார்கள். அதனால் ஜென்னி மார்க்சுக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

என் மகன் உனக்கு உகந்தவன் இல்லை. அவனை நீ மறந்து விடு என்று லுட்விக் ஜென்னியிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க ஜென்னி மறுத்துவிட்டாள்.

ஜென்னியின் காதல் குறித்து மார்க்சின் தந்தை தனது மகனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில்:

ஜென்னியிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவள் மனம் நிம்மதி அடையும் வகையில் நான் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னால் முடிந்த வரையில் ஜென்னியிடம் பேசினேன். ஆனால் எல்லா விஷயங்களையும் நான் அவளிடத்தில் நேர்முகமாகச் சொல்ல முடியாதல்லவாஅவளுடைய பெற்றோர்கள் ந்த விவாக நிச்சயத்தைப் பற்றி அபிப்பிராயப்படுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. உற்றாரும் உறவினரும் சொல்வதை நாம் புறக்கணித்துவிட முடியாது ஜென்னி உன்னை விவாகம் செய்து கொள்வதன் மூலமாக மகத்தான தியாகத்தை செய்தவளாகிறாள். இதை நீ மறந்து விடுவாயானால் உனக்கு வாழ்க்கையில் பல சங்கடங்கள் உண்டாகும். உன் மனதை நீ பரிசோதனை செய்து பார். நீ ஒர் இளைஞனாயிருந்த போதிலும் உலகத்தினரால் அது நீ உறுதியாக நடந்து கொள்வதிலும் உன்னுடைய முயற்சியிலுமே இருக்கிறது

மார்க்ஸ் உன்னை விட்டு ஜென்னியைப் பிரிப்பது என்பது எந்த ஓர் அரசிளங்குமாரனாலும் முடியாத காரியம் . இதைப் பற்றி எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. நீயும் அதை நிச்சயமாக நம்பு. அவள் தன்னுடைய உடலையும் ஆத்மாவையும் உன்னிலே ஐக்கியப் படுத்திவிட்டாள். இந்த விஷயத்தில் அவள் மகத்தான தியாகத்தை செய்திருக்கிறாள். அவளைப் போல் சம வயதுள்ள எந்தப் பெண்ணும் இது போன்ற தியாகத்தை செய்ய முடியாது. இதனை நீ மறக்கவே கூடாது
என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜென்னிக்கு மார்க்சின் கடிதங்கள்தான் சிறிது நிம்மதி அளித்து வந்தன. ஆனால் மார்க்சோ படிப்பிலேயே மூழ்கிவிடுவான். ஜென்னிக்கு கடிதம் எழுத மாட்டான். ஆனால் ஜென்னி மார்க்சின் கடிதத்திற்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பாள்.

ஆனால் மார்க்ஸ் கடிதம் எழுதவில்லையே தவிர நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தனது காதலி ஜென்னியைப் பற்றி காதல் கவிதைகளை எழுதினார். அந்த கவிதைகளை 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஜென்னிக்கு அனுப்பி வைத்தான். காதலனின் அன்பு கிடைத்து விட்டதே என்ற மகிழ்ச்சியில் ஜென்னி பூரித்தாள்.

இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள்
“இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”

ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது.

No comments:

Post a Comment