Sunday, November 18, 2012

பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்!


 Meet Bal Thackeray Most Trusted Doctor Jalil Parkar

 இந்துத்வா கொள்கையில் தீவிரமாக இருந்த பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர் என்ற ஆச்சரியமான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தாக்கரேவின் உடல்நலனை கவனித்துக்கொண்ட மருத்துவரின் பெயர் ஜலீல் பார்க்கர் என்று தெரியவந்துள்ளது.
இந்துத்துவா கொள்கை, மண்ணின் மைந்தர் கோஷம் இவை பால் தாக்கரேவின் அடையாளங்கள்.
பாகிஸ்தான் மீதுள்ள எதிர்ப்பினால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை நடத்த விடாமல் செய்தார் தாக்கரே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் நலனை இஸ்லாமிய டாக்டர் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தார் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தியைக் கேள்விப்படுபவர்ளுக்கு இது ஆச்சரியமான தகவல்தான்,
கடந்த 2009ல் பால் தக்கரேவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது, அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஜலீல் பார்க்கர் சிகிச்சை அளித்துள்ளார். அதன் பின்னர் தாக்கரேவின் இல்லமான மாதோஸ்ரீக்கு அடிக்கடி வருகை தருபவர் ஆகிவிட்டார் பார்க்கர்.
கடந்த நான்கு ஆண்டுகாலமாக இவர்கள் இருவருக்கும் இடையே மதரீதியான எந்தப் பேச்சுவார்த்தையும் சூடான விவாதங்களும் எழுந்ததேயில்லை என்கின்றனர் இவரை அறிந்தவர்கள்.
இவர்களின் உள்ளார்ந்த பிணைப்பைப் பார்த்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கட்சித் தொண்டர்களிடம் பொதுப்படையாகவே புகழ்ந்து பேசியிருக்கிறார்.
கடந்த வருடம் மும்பையில் சிவாஜி பார்க்கில் நடந்த தசரா ஊர்வலத்தில் தாக்கரே கலந்துகொண்டபோது, அவருடன் பார்க்கரும் இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
இளகிய மனம் கொண்டவர..
தாக்கரே பற்றிக் குறிப்பிடும் பார்க்கர், நான் சந்தித்ததிலேயே மிகவும் இளகிய மனதும் அன்பும் கொண்ட ஒருவர் தாக்கரே என்கிறார்.
தாக்கரேவின் மறைவுச் செய்தியை கண்களில் நீர் துளிகளோடு அறிவித்தார் பார்க்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பால் தாக்கரேவுக்கு அடுத்து, அவரது மகன் உத்தவ் தாக்கரேயும் உடல் நலம் குன்றி இருந்தபோது, பார்க்கரின் தலைமையிலான மருத்துவர் குழுவினரே அவருக்கு சிகிச்சை அளித்தனர். இப்போதும் அதுவே தொடர்கிறது.

No comments:

Post a Comment