Tuesday, September 25, 2012

கல்லீரலையும் கொஞ்சம் ஆரோக்கியமாக வெச்சுக்கோங்க...

இன்றைய அவசர உலகத்தில் உடல் ஆரோக்கியத்தை சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறது. அதிலும் மற்றவைகளை பராமரிக்கிறோமோ இல்லையோ, கல்லீரலை முக்கியமாக சரியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் கல்லீரல் நமது உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்துகிறது. அத்தகைய கல்லீரலின் வேலையை சரியாக நடத்துவதற்கு ஒரு சில உணவுகள் உதவுகின்றன. இத்தகைய உணவுகளை உண்டால் உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கி, கல்லீரலும் ஆரோக்கியமானதாக இருக்கும். அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!




பூண்டு
உடலை நன்கு சுத்தப்படுத்த பூண்டு ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அந்த பூண்டு கல்லீரலில் உள்ள நொதிப் பொருளை சரியாக இயக்குகிறது. அதாவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் அல்லீசின் மற்றும செலினியம் என்னும் பொருட்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உதவுகிறது.
திராட்சை
கல்லீரலை சரியாக பாதுகாப்பதற்கு திராட்சை உதவுகிறது. ஏனெனில் திராட்சையில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை பாதிக்கும் பொருட்களிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல், கல்லீரலின் செயல்களையும் சரியாக இயக்குகிறது.
கிழங்கு வகை காய்கறிகள்
உண்ணும் உணவில் கிழங்கு வகை காய்கறிகளான பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், அந்த காய்கள் கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுபிக்கும். ஆகவே இத்தகைய காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
பச்சை காய்கறிகள்
உணவில் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே பச்சை காய்கறிகள் தான், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற சிறந்த உணவுப் பொருட்கள். ஏனெனில் அவை சூரியகதிர்களிடமிருந்து ஒளிச்சேர்க்கையின் மூலம் குளோரோபிள்களை உற்பத்தி செய்கின்றன, அதனால் அவற்றை சாப்பிடுவதால், உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கிவிடுகின்றன. அதிலும் பாவற்காய், கீரைகள் மற்றும் முட்டை கோஸ் மிகவும் சிறந்த காய்கறிகள்.
கிரீன் டீ
கிரீன் டீயில் அதிகமான அளவு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான கேட்டசின்கள் இருக்கின்றன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் உள்ள ரேடிக்கல்களை நீக்கி, டாக்ஸின்களை வேகமாக வெளியேற்றுகின்றன.
வெண்ணெய் பழம்
வெண்ணெய் பழத்தில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்புக்கள் இருக்கின்றன. அவை கல்லீரலில் உள்ள சுத்தப்படுத்தும் செயல்களில் மட்டும் ஈடுபடாமல், புதிய செல்களை புதுபிக்கவும் உதவுகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், அதற்கான பலனை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதில் உள்ள அதிகமாக பெக்டின், செரிமானப் பாதையில் உள்ள டாக்ஸின்களை சரியாக, சுத்தமாக வெளியேற்றுகிறது.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் எண்ணெயின் பயன்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் இந்த எண்ணெயில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை சரியாக பிரிப்பதற்கு உதவுகிறது. மேலும் எந்த ஒரு டாக்ஸின்களும் அதிகமாக சேராமல் தடுப்பதோடு, இதன் வேலையை நன்கு செயல்படுத்துகிறது.
தானியங்கள்
தானியங்களில் உள்ள வைட்டமின் பி- காம்ப்ளக்ஸ், கல்லீரலுக்கு மிகவும் நல்லது. அதிலும் ப்ரௌன் அரிசி, நவதானிய மாவுகள், சோயா மாவு போன்றவை அனைத்தும் அளவுக்கு அதிகமான நன்மையை கல்லீரலுக்குத் தருகிறது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் உள்ள க்ளுக்கோசினோலேட்ஸ் (glucosinolates), நொதிப் பொருள் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த நொதிப் பொருள் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென் என்னும் பொருளை வெளியேற்றுகிறது.
ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரல் ஆரோக்கியத்துடன், உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

English summary
The importance of maintaining a healthy liver is often forgotten amidst the busy work-life. Natural foods are extremely helpful when it comes to ensuring optimum liver health.



No comments:

Post a Comment