Tuesday, September 25, 2012

அருமையான... ஜீரா சாதம்!!!

Jeera Rice Recipe



ஜீரா (சீரகம்) சாதம் ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் சீரகம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ரெசிபியை வீட்டில் செய்து, சப்பாத்திக்கு செய்யக்கூடிய கிரேவியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அத்தகைய சுவையான ஜீரா சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 1
ப்ரிஞ்சி இலை - 1
இலவங்கப்பட்டை - 1
தண்ணீர் - 2 கப்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெயை ஊற்றி, கிராம்பு, அன்னாசிப்பூ, இலவங்கப்பட்டை, ப்ரிஞ்சி இலை சேர்த்து சிறிது நேரம் தாளிக்கவும். பின் அதில் சீரகத்தை போட்டு வதக்கவும்.
சீரகம் வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு சிறிது நேரம் வறுக்கவும். பின் அதில் 2 கப் தண்ணீர் விட்டு, உப்பை சேர்த்து, மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது சுவையான ஜீரா சாதம் ரெடி!!! இதனை உங்களுக்குப் பிடித்த கிரேவியுடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

English summary
Jeera (zeera) rice is a very simple and flavorful rice and can be prepared in a few minutes. It is the simplest of all flavored rice and goes well with most of the gravies we usually prepare for roti/chapati.


No comments:

Post a Comment