Pen Drive எனும் விரலியைக் கண்டுபிடித்தவர் ஒரு மலேசியர். அவருடைய பெயர் புவா கெயின் செங். வயது 36. சிலாங்கூர், செக்கிஞ்சானில் பிறந்தவர். அங்குள்ள சீனப் பள்ளியில் படித்தவர். மேல் படிப்பிற்காக உள்ளூர் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பம் செய்தார்.
தகுதி இல்லை என்று நிராகரிக்கப் பட்டார். மனம் வெறுத்துப் போய் தைவானுக்குச் சென்று பட்டப் படிப்பை மேற்கொண்டார். தன்னுடைய அறிவியல் திறமையைப் பயன்படுத்தி USB Drive SoC எனும் விரலியை 2001ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். உலகம் முழுமையும் கோடிக்கணக்கான விரலிகள் விற்பனையாகி விட்டன.
இப்போது அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் மலேசியப் பல்கலைக்கழகங்களினால் நிராகரிக்கப் பட்ட ஒரு சாதாரண மாணவர். ஓர் அறிவுக் களஞ்சியத்தை வேறு ஒரு நாட்டிற்கு நாம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம். இவர் மூலமாக தைவான் நாடு இதுவரை 90 பில்லியன் ரிங்கிட் சம்பாதித்து விட்டது.
*****************
நன்றி haaram.com
நன்றி haaram.com
No comments:
Post a Comment