இந்த பதிவு சரியான முறையில் கையாளப்பட்டிருந்தால் இதில் உள்ள
சில தகவல்கள் உங்களை வியப்பின் உச்சத்திற்கு கொண்டுச்செல்லலாம்

Hoatzin (வாட்சின் என்று உச்சரிக்க வேண்டும்) - பார்ப்பதற்கு கொள்ளை
அழகாக இருக்கும் இந்த பறவையினம் தென் அமெரிக்க கண்டத்தில் வசிக்கின்றது. கயானா நாட்டின் தேசியப்பறவை.

கோழி அளவிலான இவை பல ஆச்சர்யத்தன்மைகளை
தன்னகத்தே கொண்டவை. வேறு எந்த பறவையினத்துக்கும்
இல்லாத தனித்துவங்கள் இவற்றிற்கு உண்டு.

படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இவற்றின் பெயரைக்
கேட்டாலே சில பரிணாமவியலாளர்களுக்கு அலர்ஜி தான்.
ஆம், பரிணாமவியலாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துக்கொண்டிருக்கின்றது இந்த உயிரினம்.

ஏன் இவை பரிணாமவியலாளர்களுக்கு கடுமையான
சவாலாக விளங்கிக்கொண்டிருக்கின்றன? அப்படி என்ன ஆச்சர்யத்தன்மைகளை, தனித்துவங்களை இவை
கொண்டிருக்கின்றன?

அறிந்துக்கொள்ள தொடருங்கள்...
ஆச்சர்யங்கள் மற்றும் தனித்துவங்கள்:
பல்வேறு நிறங்களை தன் உடலில் கொண்டுள்ள வாட்சின்,
ஒரு சரிவர பறக்கத்தெரியாத பறவை. இறக்கைகளை
படபடவென்று அடித்துக்கொண்டு மரம் விட்டு மரம் பாயியுமே
தவிர, நீண்ட தூரத்திற்கு அதனால் பறக்க இயலாது.

தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் வசிக்கும் வாட்சின்,
ஆற்று நீருக்கு மேலே உள்ள மரக்கிளைகளில் கூடு கட்டும்.
ஆண் பெண் என்று இரண்டுமே முட்டைகளை மாறி மாறி
அடைக்காக்கும்.

ஆச்சர்யமான உடலமைப்பை தன்னிடத்தே கொண்டவை
இதனுடைய குஞ்சுகள். எப்படியென்றால், குஞ்சுகளின் ஒவ்வொரு
இறக்கையின் இறுதியிலும் இரண்டு நகங்கள் உண்டு.

இந்த நகங்கள் ஆபத்தான சூழ்நிலையில் குஞ்சுகளுக்கு
உதவுகின்றன. எப்படி என்பதற்கு ஒரு உதாரணத்தை சொன்னால்
உங்களுக்கு புரிந்துவிடும். கழுகு போன்ற ஆபத்துக்கள்
வாட்சினின் கூட்டை நெருங்கினால், குஞ்சுகளை விட்டு
விட்டு தாய் தந்தை பறவைகள் பாதுகாப்பான இடங்களுக்கு
சென்றுவிடும் (குஞ்சுகள் தங்களை காத்துக்கொள்ளும் என்ற
எண்ணம் இதற்கு காரணமாக இருக்கலாம்).

இந்த குஞ்சுகள் என்ன செய்யுமென்றால், ஆபத்து நெருங்கும்
போது, கூட்டிலிருந்து அப்படியே தாவி கீழே உள்ள ஆற்றில்
விழுந்துவிடும். ஆபத்து நீங்கும் வரை நீருக்கடியில்
நீந்திக்கொண்டிருக்கும். ஆபத்து விலகிவிட்டதாக
உணர்ந்துவிட்டால், கரையேறி, தன் இறக்கைகளில்
உள்ள நகங்களை பயன்படுத்தி மரமேறி தன் கூட்டிற்கு
திரும்ப வந்து சேர்ந்துவிடும்.

இதில் மற்றொரு வியப்பான தகவல் என்னவென்றால்,
குஞ்சுக்களாக இருக்கும்போது நன்கு நீந்தவும் மரமேறவும்
தெரிந்த இவற்றிற்கு, பெரியவர்களானதும், இந்த இரண்டு
தன்மைகளும் இவற்றை விட்டு போய்விடுகின்றன.

வாட்சின்கள் சைவத்தை உணவு முறையாக கொண்டவை.
அதிலும் இலைகளையே அதிகம் உண்பவை. இவற்றை
உணவுக்காக பிடிப்பதில்லை தென் அமெரிக்க பழங்குடியினத்தவர்.
இதற்கு காரணம், இவற்றின் இறைச்சி ருசியாக இருக்காது
என்பதோடு மட்டுமல்லாமல், இவற்றிலிருந்து வெளிவரும்
ஒருவித துர்நாற்றமும் மற்றுமொரு காரணம். உணவுக்கு
வேறெதுவும் கிடைக்காத கடைசிக்கட்டத்தில் மட்டுமே
இவற்றை பிடிக்கின்றனர் பழங்குடியினத்தவர்.

உலகின் மற்ற பறவையினங்களுக்கு இல்லாத ஒரு
தனித்தன்மை வாட்சின்களுக்கு உண்டு. அது, இவற்றின்
செரிமான மண்டலம் (Digestive System) தான்.

மற்ற பறவைகளில், அவை உண்ணும் உணவுகள் gizzard எனப்படும்
இரப்பையில் உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கின்றது. ஆனால் வாட்சின்களிலோ, இவற்றினுடைய பெரிய தொண்டைப்பையில்
(Crop) உணவு செரிமானம் நடக்கின்றது. இது அறிவியல்ரீதியாக
மிகவும் ஆச்சர்யமான விசயமாகும்.

வாட்சின்களின் தொண்டைப்பை இரண்டு பகுதிகளாக
பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உணவுகளை சேமித்து
வைப்பதற்கும், மற்றொன்று செரிமானத்திற்கும்
பயன்படுகின்றது.

நம்மை வியப்பில் ஆழ்த்தும் மற்றொரு தகவல், இந்த பறவைகள்
தங்களது தொண்டைப்பையில் உணவுகளை நிறுத்திவைக்கும்
நேரம்தான். திரவ உணவுகளை சுமார் 18 மணி நேரங்கள் வரையும்,
திட உணவுகளை சுமார் 1-2 நாட்கள் வரையும் நிறுத்திவைக்கின்றன.
உலகில் வேறெந்த பறவைக்கும் இப்படியான தன்மை கிடையாது.

பாதி அறைத்த நிலையில் தொண்டைப்பையில் உள்ள
உணவுகளை மேலே கொண்டுவந்து தங்கள் குஞ்சுகளுக்கு
உணவாகக் கொடுக்கின்றன இந்த பறவைகள். வாட்சின்களின்
உணவில் ஏதேனும் நச்சுப் பொருட்கள் இருந்தால் அவை
தொண்டைப்பையில் உள்ள திரவங்களால் நீக்கப்பட்டு
தூய்மையான உணவுகளே குஞ்சுகளுக்கு செலுத்தப்படுகின்றன.

வியப்புக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய
மற்றொரு தகவல், வாட்சின்களுடைய தொண்டைப்பையும்
அதன் தன்மைகளும் கால்நடைகளை ஒத்திருக்கின்றன என்பதுதான்.
ஆம், மாடு போன்ற கால்நடைகளும் இப்படியான செரிமான
மண்டலத்தையே கொண்டிருக்கின்றன.

வாட்சின்கள் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள பதிவின்
இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்...

மர்மங்களும், குழப்பங்களும்:
வாட்சின்களின் வினோதமான உடலமைப்பும், இயல்புக்கு
மாற்றமான தன்மைகளும் பரிணாமவியலாளர்களை பெரும்
குழப்பத்திலேயே ஆழ்த்திருக்கின்றன.

- இவை எந்த உயிரினத்திலிருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்கும்?
- உலகின் மற்ற பறவையினங்கள் தங்களுக்குண்டான gizzard செரிமான மண்டலத்தை கொண்டு பிரச்சனைகள் இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்க, இவைகளுக்கு மட்டும் கால்நடைகளுக்கு இருப்பது போன்ற செரிமான மண்டலம் உருவாகத் தேவை என்ன?
- இப்படியான கேள்விகளுக்கு இதுவரை திருப்திகரமான முடிவுகள்
எதுவும் எட்டப்படவில்லை.
எதுவும் எட்டப்படவில்லை.
'பரிணாமத்தில் விடையில்லா கேள்விகள்தான் நிறைய
இருக்கின்றனவே?, இதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது'
என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க
வேண்டும். பல கேள்விகளுக்கு அப்படி இப்படி என்று
எதையாவது கூறி
சமாளிக்கவாவது முயற்சி செய்வார்கள் பரிமாணவியலாளர்கள்.
ஆனால் வாட்சினை பொறுத்தவரை அப்படியான அனுமானம் கூட
கிடையாது. ஒரு பெரிய வெற்றிடம் மட்டுமே.

டி.என்.ஏ நிலைவரிசை தகவல்கள் (DNA Sequence data) கூட
சூழ்நிலையை மோசமாக்கினவே தவிர சீராக்கவில்லை.

No satisfying evolutionary hypothesis has been proposed, and the situation has become worse with the availability of DNA sequence data - wikipedia
இதுவரை எந்தவொரு திருப்திகரமான பரிணாம அனுமானமும் முன்வைக்கப்படவில்லை. டி.என்.ஏ நிலைவரிசை தகவல்கள் சூழ்நிலையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன - wikipedia
இப்படியான படுகுழப்பமான சூழ்நிலை வாட்சின்கள் விசயத்தில்
நீடிப்பதாலேயே இவற்றை வேறெந்த (பறவை) குடும்பத்தோடும்
சேர்க்காமல் இவற்றிற்கென தனி குடும்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்
(Family-Opisthocomidae).

உலகின் பெரும்பான்மை உயிரினங்களான பூச்சிகளின்
தோற்றத்தில் எப்படி விடைத்தெரியாமல் விழிப்பிதுங்கி
நிற்கின்றனரோ, அதுபோலவே வாட்சின்களின் விசயத்திலும்
நிற்கின்றனர் பரிணாமவியலாளர்கள். (பூச்சிகளின் தோற்றம்
குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

இருக்கும் தலைவலி போதாதென்று மற்றுமொரு புது பிரச்சனை
வாட்சின்கள் விவகாரத்தில் தற்போது கிளம்பியுள்ளது.

அறிவியல் ஆய்விதழான "Naturwissenschaften"-னில், (5th October, 2011) வெளிவந்த
ஒரு ஆய்வுக்கட்டுரை, வாட்சின்கள் குறித்த புது தகவலை கூறுகின்றது. அதாவது, ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான எலும்புத்துண்டுகள் வாட்சின்களின் உடலமைப்பை ஒத்திருக்கின்றன என்ற தகவல்தான் அது.

அப்படியென்றால், வாட்சின்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவை சார்ந்தவைகளாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
பிரச்சனை இங்கு தான் ஆரம்பிக்கின்றது. வாட்சின்கள் தென்
அமெரிக்காவில் மட்டுமே வசிக்கின்றன. வாட்சின்களின்
மூதாதையர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை என்றால்,
எப்படி அவை தென் அமெரிக்காவிற்கு வந்தன? சற்று தூரம் கூட
பறக்க முடியாத அவை, ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்கவிற்கும்
நடுவில் இருக்கக்கூடிய 1000 கி.மீ (க்கும் மேலான) அகலம் கொண்ட அட்லான்டிக் பெருங்கடலை எப்படி தாண்டின?

இவைகளின் மூதாதையர் ஓரளவு நன்கு பறக்கக்கூடியவைகளாக இருந்திருக்கலாம் என்று நினைத்தாலும் கூட, 1000 கி.மீ தூரத்தை
கடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றது Science Daily தளம்.

But how does a bird, which is an especially poor long-distance flyer, manage to cross a sea that is over 1,000 kilometres wide? Even if the flying capabilities of the Hoatzin's ancestors were better, it is highly unlikely that they could have managed this distance in the air - Science Daily, 4th Oct 2011
பிறகு எப்படித்தான் கடந்தன?
இங்கு தான் ஒரு சூப்பர்(??) விடையை கூறுகின்றனர் பரிணாமவியலாளர்கள். அதாவது மிதவைப் போன்ற ஒன்றில் ஆப்ரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு வந்திருக்கலாமாம் வாட்சின்கள் (drifting flotsam, rafting event).
மிதவை என்றால் நாம் பார்க்கக்கூடிய கட்டுமரங்கள் போன்று
இருக்கலாம், அல்லது ஒரு சிறு தீவு போன்ற நிலப்பரப்பு அப்படியே
தண்ணீரில் மிதந்து செல்வதாக இருக்கலாம். நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

இப்படி கண்டம் விட்டு கண்டம் மிக நீண்ட தூரம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் மிதவையில் செல்ல வாய்ப்புண்டா? அப்படி இதுவரை ஒரு பயணத்தை சோதித்து பார்த்திருக்கின்றார்களா? அல்லது இதுவரை
அப்படியொரு பயணத்தை யாராவது பார்த்திருக்கின்றார்களா?

பரிணாமவியலாளர்களின் இத்தகைய கற்பனை கதைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு அப்படி
சொல்வதைத்தவிர வேறு வழியும் இல்லை. டார்வினின் காலத்தில்
இருந்து பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்களை
தேடிக்கொண்டிருப்பவர்கள் தானே இவர்கள்? ஆதாரங்கள்
எதுவும் இல்லாதபோது இப்படியான எண்ணங்கள் தோன்றத்தான்
செய்யும்.

எது எப்படியோ, வாட்சின்கள் தொடர்ந்து இவர்களுடன்
கண்ணாம்மூச்சி ஆடிக்கொண்டிருக்கின்றன.'வாட்சின்கள்
விவகாரத்தில் மர்மமான முறையில் பரிணாமம் வேலை
செய்திருக்கின்றது' என்ற (வழக்கமான) பதிலை சொல்லி
தங்களை சமாதானப்படுத்திக்கொண்டு காலம் பதில்
சொல்லும் என்று காத்திருக்கின்றனர்.

இதுவரை பரிணாம விசயத்தில் எதிர்மறையான பதில்களையே
இவர்களுக்கு சொல்லியுள்ள காலம், வாட்சின்கள் விசயத்திலாவது
இவர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய பதிலை சொல்லுமா??.....
இவர்களுடன் சேர்ந்து நாமும் காத்திருப்போம்....

இறைவனே எல்லாம் அறிந்தவன்...
Pictures taken from:
1st Picture - 'Its Nature' website.
2nd Picture - Howstuffworks website and tailored by aashiq ahamed.
3rd Picture - Scientific American blog.
My sincere thanks to:
1. Lynx Edicions.
References:
1. Across the Atlantic On Flotsam: New Fossil Findings Shed Light On the Origins of the
Mysterious Bird Hoatzin - Science Daily, 4th oct 2011. link

2. HBW 3 - Family text: Opisthocomidae (Hoatzin) - Handbook of the Birds of the World, Lynx
Edicions. link
Edicions. link
3. Hoatzins are no longer exclusively South American and once crossed an ocean - Scientific
American blog, 5th oct 2011. link
American blog, 5th oct 2011. link
4. Hoatzin - Encyclopedia Britannica. link
5. Hoatzin - howstuffworks. link
6. Hoatzin — the strangest bird in the Amazon: Houston Chronicle, 9th April 2010. link
7. Hoatzin - Wikipedia. link
8. Hoatzin (Opisthocomus hoazin) - Guyana Birding. link
9. More Taxa, More Characters: The Hoatzin Problem Is Still Unresolved - Molecular
Biology and Evolution, Oxford Journals. link

10. The Case of the Mysterious Hoatzin: Biogeography Fails Neo-Darwinism Again -
Evolution News, 5th Nov 2011.link
Evolution News, 5th Nov 2011.link
11. Opisthomocus hoazin - Oiseaux birds. link
12. RELIC OF PREHISTORY? - Last Refuge. link
13. Hoatzin – Beautiful Stinkbird: Suite 101. link
14. Oceannic dispersal - wikipedia. link
15. Biogeographical Challenges to Neo-Darwinian Evolution - Idea center. link
16. The Horrible Hoatzin - Its Nature. link
***************************************
நன்றி :
ஆஷிக் அஹமத் அ
No comments:
Post a Comment