கோடையில் அதிகரிக்கும் தாகத்தைக் குறைக்க இளநீர், நீர்மோர் போன்ற பானங்களை பயன்படுத்துவது என்பது பழங்காலம் முதலே இருந்து வருகின்றது.
ஆனால் தற்போதைய நவீனகாலஅந்நிய கலாச்சார தாக்கத்தால் மக்கள் கோடைகாலங்களில் செயற்கை ரசாயன குளிர் பானங்களை அதிகஅளவில் குடிக்கின்றனர்.
தற் போது செயற்கையாக தயாரிக்கப்படும் சோடா அல்லது இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்கள் என்பது மக்களுக்கு இரண்டாம் தர சர்க்கரை நோயை உருவாக் கக் கூடும் என்று ஆய்வாளர் கள் கண்டறிந்துள்ளனர்.
குளிர்பானங்களை வரம்பின்றி அருந்துவதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.8 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.சமீபத்தில் கூட அமெரிக்காவில் அதிகமாக கோக்க கோலா குறித்த இளம்பெண் மரணமான செய்தியை படித்திருப்பீர்கள்.
ஆண்டுதோறும் 1.33 லட்சம் பேர் வரை நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 44 ஆயிரம் பேர் இருதய நோயாலும், 6 ஆயிரம் பேர் புற்று நோயாலும் பாதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் சென்ற ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் பேர் குளிர்பானங்களை அதிக அளவு அருந்தியதால் உயிரிழந்துள்ளனர்.
அதிக அளவில் குளிர்பானம் அருந்தி உயிரிழப்பவர்களில் 78 சதவிகிதம் மக்கள் குறைவான, நடுத்தர வருமானம் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரத் தகவல்களும் வெளியாகி உள்ளது.
இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மெக்சிகோ.
அங்கு குளிர்பானம் பருகிய 10 லட்சம் பேரில் 318 பேர் உயிரிழந்துள்ளனர் என கிரேக்க நாட்டில் இருந்து சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் லண்டன், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், பிரான்ஸ் ஆகிய 7 ஐரோப்பிய நாடுகளில் குளிர்பானங்கள் அருந்தும் 27 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை" டயப்பட்டாலஜியா "என்ற மருத்துவ நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இதன் படி 15 ஆண்டுகாலமாக நடத்தப்பட்ட ஆய்வில் 40 சதவிகிதம் மக்கள் இரண்டாம் தர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தினமும் ஒரு சோடா அல்லது 12 அவுன்ஸ் சர்க்கரை சோர்க்கப்பட்ட குளிர்பானங்களை பயன்படுத்துபவர்கள் 18 சதவிகிதம் அதிகப்படியான பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளதும் தெரியவந்துள்ளது.
" தினமும், சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அதிக அளவில் பருகும் போது அவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது"- என்று லண்டனில் இம்பிரியல் கல்லூரியின் ஆய்விக்குழுவின் தலைவர் டோரா ரோமரேரா தெரிவித்துள்ளார். இதுபற்றி சர்க்கரை நோய் வல்லுனர்கள் ஆய்வில் 'அதிக அளவு இனிப்பூட்டப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துவோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதோடு மட்டுமன்றி உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக ' கண்டறிந்து எச்சரித்துள்ளனர்.
இந்த மென்பானங்களின் பின் பாதிப்புகளை மனதில் கொண்டு இனி கோலா க்களை குடியுங்கள்.
வெறும் விளம்பரங்களைக் கண்டு பிடித்த நடிகர் ஆடிக்கொண்டு குடிப்பதையும்,கிரிக்கெட் காரர்கள் குடித்து விட்டு ரன்களை குவிப்பதையும் கண்டு ஏமாறாதீர்கள்.
பணத்துக்காக மட்டுமே நடிகர்கள் நடிக்கிறார்கள் குடிக்கிறார்கள்.
பணத்தை பார்த்துதான் ரன்களையும் குவிக்கிறார்கள்.
அதை பார்த்து நீங்கள் பணத்தையும்-உடல் நலத்தையும் கோலாக்களாலும் ,பீர்களாலும் இழந்து விடாதீர்கள்.
கோடை தாகத்தை தணித்து உடலுக்கு நன்மை தருவதில் இளநீரும்,நீர் மோரும்தான் முதலிடம்.
-------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்
No comments:
Post a Comment