Friday, January 18, 2013

பறக்கும் தட்டுக்கள் உண்மைதானா? சில உண்மைகள்!




பறக்கும் தட்டுகளைப் பற்றி அவ்வப்போது பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்திகள் வெளிவருகின்றன. உண்மையில் அவை என்ன? இதுகுறித்துப் பல்வேறுவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன உண்மையில் பறக்கும் தட்டுகளாகக் கருதப்படுபவை, வானிலை ஆராய்ச்சிக்காகப் பறக்கவிடப்படும் சாதனங்கள் என்றும், காற்றாடிகள் என்றும், விமானங்கள் என்றும் பல்வேறு விதமாகக் கூறுகிறார்கள். மேலும், இவை வெறும் பிரமை என்றும், வேறு உலகங்களில் வாழும் மக்கள் பயணம் செய்யும் கலங்கள் என்றும் வாத, பிரதிவாதங்கள் சூடாக நடைபெறுகின்றன.

பறக்கும் தட்டுகள் குறித்த செய்திகள் விஞ்ஞானிகளின் கவனத்தையும் கவர்ந்துள்ளன. அவை பற்றிய செய்திகளை விஞ்ஞானிகள் பதிவு செய்து, அவற்றின் உண்மையைச் சோதிக்கத் தொடங்கினர். இவற்றில் 80 சதவீதம், வானிலை ஆராய்ச்சி சாதனங்கள், பிரமாண்ட பலூன்கள் போன்றவை என்று தெரியவந்தது. மற்ற 20 சதவீதத்தைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் கூற முடியவில்லை. அந்த 20 சதவீத நிகழ்வுகளை மேலும் ஆராய்ந்தபோது, அவற்றில் பெரும்பாலானவை வாயு மண்டலத்தில் ஏற்பட்ட இயற்கை நிகழ்ச்சிகளே என்று தெரியவந்தது. ரஷிய விஞ்ஞானப் பேரவையைச் சேர்ந்த ஏ. மோனின், பேராசிரியர் ஜி. பாரென்பிளாட் என்ற இரு விஞ்ஞானிகள், பறக்கும் தட்டுகள் பற்றிய விஞ்ஞான அடிப்படையைக் கண்டுபிடிக்க முற்பட்டனர்.

 

அவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளின் விளைவாகச் சில உண்மைகளைக் கண்டனர். இந்தப் பறக்கும் தட்டுகள், வாயு மண்டலத்தில் வெவ்வேறு அடர்த்தியுள்ள காற்று அடுக்குகளுக்கு இடையேயான இடைவெளிப் பகுதிகளில் ஏற்படும் சூனிய நிலையில் தோன்றுகின்றன என்று அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த சூனியப் பகுதிக்குள் இழுக்கப்படும் நுண்ணிய துகள்கள் மற்றும் நீர்த் திவலைகளின் அடர்த்தி அதிகரிக்கும்போது அவை பறக்கும் தட்டுப் போன்ற தோற்றத்தை அடைகின்றன என்பது அவர்களின் விளக்கம்.
------------------------------------------------
http://puthiyaulakam.com/?p=7043

No comments:

Post a Comment