Tuesday, January 8, 2013

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் – சில அறிமுகக் குறிப்புக்கள்...

20th century Sri Lankan Moors
Group of early 20th century Sri Lankan Moors. 

மிக நீண்ட காலமாக தனது பூர்வீகம்,வரலாறு குறித்து பிரக்ஞையற்றிருந்த முஸ்லிம் சமூகம் அண்மைக் காலமாக புது உத்வேகத்துடன் தன் பூர்வீகம் தொடர்பாக மிக நுணுக்கமான ஆய்வுகள் மேற் கொண்டு வருவதனைக் காணலாம்.

முஸ்ளிம்களின் புலமைத்துவ மட்டத்தில் தம் பூர்வீகம் குறித்த முரணான வாதங்களும் கருத்து நிலைகளூம் நிலவி வந்த போதும் அவை ஆரோக்கியமான தேடலைத் தோற்றுவித்தது என்பதும் உண்மையை.

அந்த வகையில் எமது பூர்வீகம் தொடர்பாக மேற் கொள்ளப்பட்டு வரும் ஆய்வு முயற்சிகள் தொடர்பாக நடை பெற்ற கலந்துரையாடல்களை நமது பூர்வீகம் குறித்து புதிதாகவோ அல்லது மீள் வாசிப்புக்கு உட்படுத்துவதற்கு இலகுவாகவும் தெளிவுகளைப் பெற கேள்வி அமைப்பில் கருத்துக்களைத் தொகுத்துத் தருகின்றேன்.

பல்லின சமூகங்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் மீது அவர்களது தனித்துவ இன அடையாளம் மீது கேள்வி எழுப்பபட்ட போது தாம் சோனகர் எனும் இன அடையாளம் முஸ்லிம் புத்திஜீவிகளால் முன் வைக்கப்பட்டது. சோனகம் எனும் சொல்லின் பின்னணி என்ன? இப்பதம் யாரைக் குறிக்கின்றது? முஸ்லிம்கள், பிற சமூகங்கள் என அனைத்துத் தரப்பினரும் இதில் உள்ளடக்கப்படுவார்களா?
சோனகர் – யாவோ (மலே) என இரு முஸ்லிம் வகையினரை இலங்கையில் நாம் காண்கிறோம். இவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. டீ.பி.ஜாயா மலே வகை முஸ்லிமாவார்.இவர்களின் முக அமைப்பினை வைத்து மிக இலகுவாக வெளிப்படையாகவே இனங் காண முடியும்.


 
The Jami-ul-Alfar Mosque in Pettah, Colombo was built in 1901. 

தென்னிலங்கையில் தான் மலே முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்றனர். கிண்ணியா பிரதேசத்திலும் இவ்வாறான தாக்கங்களைக் காண முடிகிறது. கரையோர முஸ்லிம்கள் என எம்.ஐ.எம். அஸீஸ் யாரைக் குறிப்பிடுகின்றார் எனும் கேள்வி இன்று வரை எழுகின்றது. ஆனால், இலங்கையின் சுதந்திரக் கட்சியில் இருந்த ராஸிக் பரீட் சோனகரை உள்ளடக்கியிருக்கிறார்.

மலே முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாகவே காணப்படுகின்றனர். (இவர்களுக்கு என தனிப் பள்ளி வாசல்களும் இருக்கின்றன) இதுவே அரசியல் முரண்பாடுகளுக்கும் காரணமாய் இருந்திருக்கிறது.

அலவி மெளலானா – பெளசி ஆகியோருக்கு இடையில் ஏற்படும் முரண்பாட்டு நிலைக்கு காரணமும் இது தான். அமைச்சர் அலவி மெளலானா மலே முஸ்லிம் பிரிவையும் அமைச்சர் பெளசி சோனகர் பிரிவையும் சேர்ந்தவர்கள்.

எனவே, சோனகர் எனும் பதமானது மலே முஸ்லிம்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவு. எனினும் , இச்சொல் உண்மையில் யாரைக் குறிக்கின்றது என்பது தொடர்பாக விரிவான ஆய்வுகள் இல்லை. இது தொடர்பாக நிலவும் மந்தமான ஆய்வு நிலைக்கு முக்கிய காரணம் அது ஒரு இழிவுக்குரிய ஒன்றாகவும் ஏனைய சமூகங்களிடத்தில் தம்மை அவமானப்படுத்த பாவிக்கப்படுவதாக முஸ்லிம்களும் கருதுகின்றமையை ஆகும்.


 
Kechimalai Mosque, Beruwala. One of the oldest mosques                                                                                                                                                 in Sri Lanka. It is believed to be the site where the first Arabs landed in Sri Lanka 

‘’சோனி’’ என அழைக்கப்படும் போது இயல்பாகவே எமக்கு கோபம் வந்து விடுகிறது. இங்கு மிக முக்கிய அம்சம் இதைக் கேட்கும் போது நாம் ஏன் கோபப்படுகிறோம்? என்பதே ஆகும்.

இது குறித்து நாம் யாரும் சிந்திப்பதில்லை. மாறாக, இந்தச் சொல்லின் மூலம் எம்மை இழிவுபடுத்துகின்றான் என்ற எண்ணமே மேலோங்குகிறது.

உண்மையில், இதைக் கேட்கும் போது நாம் கோபமடைகிறோமோ அதுவாகவே நாம் இல்லை என்பதே யதார்த்தமாகும். அப்படி எனின் ஏன் நாம் அழைக்கப்படுகிறோம்?

இவ்வாறான கேள்வித் தூண்டல்கள் ஒரு சமூகத்தின் தனித்துவமான இனத்துவ அடையாளங்களை மீட்டிக் கொடுத்திருக்கின்றது என்பதும் கருத்திற்க் கொள்ளத்தக்கது.



Sri Lankan Malay Father and Son, 19th century


‘’ நான் ஏன் இந்து அல்ல ?’’ எனும் நூல் இவ்வகை சார்ந்ததாகும். சாதி என்பது ஒரு சமூகம். இந்த்ச் சோனி எனும் சொல் தழிச் சாதிகளில் வரும் எந்தச் சமூகத்தையும் குறிப்பதில்லை. இதன் மூலம் சாதிய அமைப்பு நிலவும் தமிழ்ச் சமூகத்திற்குரிய சொல் இதுவல்ல என்பதனை எம்மால் அறிய முடியும்.

அதே நேரம், சோனிச் சாதி என்பதன் அர்த்தம் சோனிச் சமூகம் என்பதாகவே அமையும் என்பது மட்டுமல்ல , நாம் தனிச் சமூகம் கூட என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்தப் பின்னணியில் தான் ‘’தேசம்’’ பற்றிய கருத்தின் விளக்கம் ஒரு தனிச் சமூகம் வாழ்கின்ற தனிப் பிரதேசம் அல்லது தேசமாக அமைகிறது.

எடுத்துக் காட்டாக, மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் கற்பாறையில் தனது தடியினால் அடித்து 12 நீர்ச் சுனைகளை ஏற்படுத்துமாறு கட்டளையிட்டான். ஏன் இந்த 12 நீர்ச் சுனை? ஒவ்வொரு சமூகமும் தனக்கே உரிய தனித்துவமான முறையில் நீரைப் பருக வேண்டும் என்பதற்காகவே அந்த 12 கூட்டதினருக்கும் அல்லாஹ் தனித் தனி நீர்ச் சுனைகளை ஏற்படுத்தினான்.


The green band on the Sri Lankan flag represents Islam and the Moorish ethnic group


இதன் மூலமாக ஒவ்வொரு சமூகத்திற்கும் நீரைப் பருகுவதிலிருந்தே அவற்றுக்குரிய பண்பின், கலாசாரத்தின் தனித்துவக் கூறுகள் வெளிப்படத் தொடங்கி விடுகின்றன.

வழக்கில் இருக்கும் சொற்களை அல்லது உருவாக்கப்படும் சொற்களுக்கான வரைவிலக்கணங்களை அல்குர்ஆன் சொல்லும் வரலாற்று வரைவிலக்கணங்களிலிருந்தே தேடுவோம்.

நவ வரலாற்று வாதம் முன் வைக்கின்ற வாதம் வரலாறு என்பது புனைவு. எனவே, ஆதாரமில்லாத எதுவும் ஏற்கப்படமாட்டாது?.
வரலாற்றின் தோற்றம், உள்ளடக்கம் எவை என்பது எமக்குத் தெரியும். எமது வரலாறு புனைவு எனின் உங்களது வரலாறும் புனைவுதான். ஏனெனில், நீங்கள் தான் இது உங்களுடைய வரலாறு என்று பதிவு செய்திருக்கிறீர்கள். நாமாகவே, எமது வரலாற்றைச் சொல்ல முனைந்த போது அவை நீங்கள் எங்களது வரலாறு என்று சொன்னவற்றுக்கு முரணாக அமைந்த போது மறுக்கிறீர்கள்.






எனவே தான் நாம் சொல்லாத உங்களது வரலாறும் புனைவு என்றோம். வரலாறுகள் புனைவு எனின் எல்லோரும் அவர்களது வரலாறுகளை விட்டு விடுவோம்.

அல்குர்ஆன் கூறும் வரலாற்றினைப் பார்ப்போம். அல்குர்ஆன் வரலாறு சொல்லும் போது சமூகத்தைப் பற்றியும் அல்லது சமூகமாகவே வரலாற்றினைச் சொல்வதனைக் காண்கிறோம். சிலபோது அவற்றின் இடப் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றைக் குறிக்கும் அல்லது பெயர் குறிப்பிடாது சமூகமாக வாழ்ந்தனை மாத்திரம் குறிக்கும். அவற்றின் வாழ்வு முறை பற்றியும் அதன் நிகழ்வுகள், அழிவிற்கான காரணங்கள், சிலபோது அவற்றின் அழிவின் வகை பற்றியும் குறிப்பிடும்.



Husain J Ibrahim (in Customs Uniform) with his son, Firoze & daughter, Shirani, hosting the                                                                                                      High Priest of the Davoodhi Borah order (seatd on left), his son (setaed on right) from India,                                                                                                    together with their entourage on their visit to Sri Lanka, at Talaimannar, Sri Lanka. 1952

அரேபிய பாலைவன சூழலில் வாழ்ந்த சமூகத்திற்கு இந்தக் கதைகளை அல்குர்ஆன் விளக்கிச் சொன்னது தெளஹீதை நிலை நாட்டவே ஆகும்.

ஆனால், இன்று இலங்கையில் முஸ்லிம்கள், தமது அரசியல் தனித்துவ அடையாளமாக நிலைப்படுத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று கட்சி அரசியல் பேசிய எமக்கு எம் வரலாறு தேவை, அது நிச்சயமாக எமது வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் நாம் எழுதும் வரலாறு தான் என்பதில் எத்தகைய சந்தேகமுமில்லை.





இத்தகைய கருத்தினை வலியுறுத்தியும் 2005களில் ‘’சோனக தேசம்’’ எனும் நூல் வெளி வந்தது. இந்நூல் ஆதாரம் எதனையும் தனது குறிப்புகளூக்காகச் சொல்லப்படவில்லை எனும் குற்றச்சாட்டுக்களை எதிர் கொண்ட.து.
ஒரு விடயம் சொல்லப்படுகின்ற போது சொல்லப்படும் விடயமே ஆதாரமாக காணப்படும் போது எவ்வாறு அதற்கு ஆதாரம் சொல்ல முடியும்?. இனி வரும் வரலாற்று ஒழுங்குகளுக்கு மூலாதாரமாய் அமையப் போவதே இந்த ஆதாரங்கள் தான்.

இது எமது வரலாற்றினைத் தேடும் பயணம், அதில் ஆதாரமே நாம் தான், இஸ்லாமியக் கருத்தில் நபிமார்கள் இல்லாத காலப் பகுதிகள் ஜாஹிலிய்யக் காலமாகவே கருதப்படும். அந்த சமூகத்தில் கல்வி மேம்பாடு, சமூக மேம்பாடு இருந்த போதிலும் கூட. அப்படியெனில் 1400 ஆண்டுகள் கழிந்திருக்கின்ற நிலையில் நாம் வாழும் காலம் எப்படியானதொரு ஜாஹிலிய்யத் நிறைந்த காலமாக இருக்கும்?.

 

ஐன்ஸ்டினின் தத்துவம் என்ன சொல்கிறது?

இந்த பிரபஞ்சத்தை நீளம், அகலம், உயரம் கொண்ட பரிணாமமாய் மட்டுமல்ல, காலம் எனும் அளவு சேரும் போது மட்டுமே அது முழுமை பெறுகிறது.
------------------------------------------------------------------------

நன்றி :அகமது
ஈகரை தமிழ் களஞ்சியம் 
http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Moors
http://en.wikipedia.org/wiki/Islam_in_Sri_Lanka
http://www.sonakar.com/2011/04/moors-of-sri-lanka-an-alternative-view/

No comments:

Post a Comment