Friday, December 28, 2012

புளூட்டோ என்ற கோள் தகுதி இழக்க காரணம் என்ன ?...புளூட்டோ பற்றி இன்னும் பல தகவல்கள்.







புளூட்டோ, 1930 ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி கண்டறியப்பட்டது. கிளைடு டொம்பா, 22 வயது நிரம்பிய ஓர்இளைஞர் புளூட்டோவை கண்டுபிடித்தார்

புளூட்டோ என்ற பெயரை முன்மொழிந்தவர் யாரென்றால், இங்கிலாந்து, ஆக்ஷ்போர்டை சேர்ந்த 11 வயது நிரம்பிய வேநிஷியா பர்னி என்ற பள்ளி மாணவிதான். முறையாக 1930 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி புளூட்டோ என்ற பெயரை அறிவித்தனர். அன்றில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 ஆம் தேதி வரை சூரியக் குடும்பத்தில் கடைக்கோளாக இருந்து வந்தது.

1975 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆற்றல் வாயிந்த தொலைநோக்கி தொழில்நுட்பம் நிறைந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண்வெளியை வானவியலார்கள் ஆய்வு செய்து வந்தனர். எர்னஷ்ட் w.பிரவுன் என்பவர் புளூட்டோவை விட அளவில் பெரிய கோளைக் கண்டறிந்து அதற்க்கு ஜீனே என்று பெயர். அதற்க்கு பத்தாவது கோள் என்று பெயரிட்டார். மேலும் பல கோள்கள் கண்டறியப்பட்டன. எனவே தரப் படுத்தவேண்டிய சூழல் உருவானது. அப்போது கோள்கள் பாரிய புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு கோளிற்கு அருகில் எந்தப் பொருளும் இருக்கக் கூடாது அனா வரையறுக்கப்பட்டது புளூட்டோ, கோளுக்கான தகுதி இழக்க முக்கிய காரணம் என்பர். ஏனெனில் புளூட்டோ கோளிலிருந்து மிக அருகில் சந்திரன் உள்ளது என்று தெளிவு படுத்தி புளூட்டோ குள்ளக்கோள் (Dwarf Planet ) என குறிப்பிட்டனர். 



நன்றி: துளிர்




இதோ புளூட்டோ பற்றி இன்னும் பல தகவல்கள் :

 பள்ளி மாணவர் களுக்கான அறிவியல் பாடப் புத்தகத்தைப் புரட்டினால் சூரிய மண்டலத்தில் மொத்தம் ஒன்பது கோள்கள் உள்ளன என்று காணப் படும். ஆனால் இந்த ஒன்பது கோள்களில் ஒன்றான புளூட்டோ என்ற கோளை அது கோளே அல்ல என்று கூறி வானவியல் விஞ்ஞானிகள் கடந்த 2006 ஆம் ஆண்டில் தூக்கி எறிந்து விட்டார்கள்.

ஆனால் அமெரிக்காவில் இல்லினாய் மாகாண அரசு புளூட்டோவை இன்னமும் ஒரு கோளாகக் கருதுகிறது. அந்த மாநிலம் ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதியை புளூட்டோ தினமாகக் கொண்டாடுகிறது. காரணம் புளூட்டோ கோளைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போ அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். புளூட்டோ 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல நியூ மெக்சிகோ மாகாணமும் புளூட்டோ தொடர்ந்து ஒரு கோளாக இருந்து வருவதாகக் கருதுகிறது. ஏனெனில் புளூட்டோவைக் கண்டுபிடிப்பதற்கு டாம்போவுக்கு உதவிய வான் ஆராய்ச்சிக்கூடம் அந்த மாகாணத்தில் தான் உள்ளது. ஆகவே நியூ மெக்சிகோ மாகாண சட்டமன்றம் 2007 ஆம் ஆண்டில் புளூட்டோ ஒரு கோள் தான் என்று அறிவித்து சட்டம் நிறைவேற்றியது. இதெல்லாம் பழங்கதை.

இப்போது புளூட்டோ பற்றிய புதிய செய்தி உண்டு. புளூட்டோ கோளுக்கு அய்ந்தாவது சந்திரன் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கே ஒரு சந்திரன் தான் உள்ளது. நமது சந்திரனை விடச் சிறியதான் புளூட்டோ அய்ந்து சந்திரன்களைப் பெற்றுள்ளது என்பது வியக்கத் தக்க ஒன்றாகும்.

புளூட்டோவின் அய்ந்து சந்திரன்களில் சாரோன்,1978 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நிக்ஸ், ஹைட்ரா ஆகியவை 2005 ஆம் ஆண்டிலும் 4 எனப்படும் சந்திரன் 2011 ஆம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் பெயர் 5 ஆகும். சாரோன் தவிர, மற்ற நான்கும் வானில் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹப்புள் டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்திரனின் குறுக்களவு சுமார் 24 கிலோ மீட்டராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.



                

முதலில் புளூட்டோ எங்கே இருக்கிறது என்று பார்ப்போம். புளூட்டோவுக்கு அப்பால் ஒரு கோளும் கிடையாது என்று சொல்கின்ற அளவுக்கு அது சூரிய மண்டல எல்லையில் உள்ளது. பூமியிலிருந்து புளூட்டோ குறைந்தது 430 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புளூட்டோ அவ்வளவு தொலைவில் உள்ளதால் அது சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன. சூரிய மண்டலத்தில் புளூட்டோ நீங்கலாக எல்லா கோள்களுக்கும் ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட்டு அவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆகவே தான் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா புளூட்டோவை நெருங்கி ஆராய்ந்து படங்களைப் பிடிப்பதற்காக நியூ ஹொரைசன்ஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை 2006 ஜனவரில் செலுத்தியது.

                 

அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து மணிக்கு 58 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்ட அந்த விண்கலம். இதுவரை பாதிக்கும் அதிகமான தூரத்தைத் கடந்துள்ளது.. நியூ ஹொரைசன்ஸ் 2015 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் தான் புளூட்டோவை நெருங்கும். ஆனால் அது புளூட்டோவில் தரை இறங்காது. நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை வேகமாகக் கடந்து செல்லும். அப்போது விண்கலத்தில் உள்ள நுட்பமான கருவிகள் புளூட்டோவை ஆராய்ந்து தகவல்களை பூமிக்கு அனுப்பும். விண்கலத்தில் உள்ள படப்பிடிப்புக் கருவிகள். துல்லியமான படங்களைப் பிடித்து அனுப்பும். இதன் மூலம் புளூட்டோ பற்றி விஞ்ஞானிகள் மேலும் பல தகவல்களை அறிய இயலும்.

புளூட்டோவின் அய்ந்தாவது சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திரன்களில் எந்த ஒன்றின் மீதும் நியூஹொரைசன்ஸ் மோதாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.அந்த விண்கலம் புளூட்டோவை நெருங்கும் நேரத்தில் மணிக்கு 48 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாக இருக்கும். பொதுவில் எந்த விண்கலத்தையும் பிரேக் போட்டு நிறுத்த முடியாது. திடீரென அதன் பாதையை மாற்ற இயலாது. வேகத்தையும் திடீரென குறைக்க இயலாது. அந்த அளவில் விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அய்ந்தாவது சந்திரனையும் கணக்கில் கொண்டு முன்கூட்டியே நியூஹொரைசன் விண்கலத்தின் பாதையைத் தகுந்தபடி நிர்ணயிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் நெல்லிக்காய் அளவு உள்ள சிறிய பொருள் மோதினாலும் போதும். விண்கலத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டு விடும்.

நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ஆராய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அய்ந்தாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பாக மேலும் அதிக தொலைவிலிருந்து ஆராயும் வகையில் அதன் பாதை மாற்றப்படலாம். சரி, புளூட்டோ ஒரு கோளே அல்ல என்று சர்வதேச வானவியல் சங்கம் ஏன் தீர்ப்பளித்தது ஒரு கோள் என்றால் அது சில தகுதிகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்பது அச்சங்கத்தின் கருத்து. முதலாவதாக ஒரு கோள் என்றால் அது சூரியனைத் தனிப்பாதையில் சுற்றி வர வேண்டும். இரண்டாவதாக அது உருண்டையாக இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் புளூட்டோ பூர்த்தி செய்கிறது.

மூன்றாவது தகுதி ஒரு கோள் தனது வட்டாரத்தில், சுற்றுப்பாதையில் இருக்கக்கூடிய துண்டு துக்கடாக்களை தன் பால் ஈர்த்து அவற்றை கபளீகரம் செய்திருக்க வேண்டும். இந்த மூன்றாவது தகுதி புளூட்டோவுக்கு இல்லை என்பது சர்வதேச வானவியல் சங்கத்தின் கருத்து. நீண்டகாலம் மக்களால் கோள் என்று கருதப்பட்ட புளூட்டோவை இப்படி திடீரென தகுதி நீக்கம் செய்வது சரியல்ல என்பது பலரின் கருத்து. தவிர, சர்வதேச வானவியல் சங்க கூட்டத்தில் புளூட்டோ பற்றி முடிவு எடுக்கப்பட்ட போது மொத்த உறுப்பினர்களில் 40இல் ஒரு பங்கு உறுப்பினர்களே இருந்ததால் அது முறையாக எடுக்கப்பட்ட முடிவு ஆகாது என்றும் வாதாடப்படுகிறது. புளூட்டோ ஆதரவாளர்களின் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.







நன்றி: விடுதலை டாட் இன்

No comments:

Post a Comment