Monday, December 10, 2012

கவனமா பார்த்துக்கங்க டீன் ஏஜ் பெண்களை!

                          

டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை டீன்-ஏஜ் என்கிறோம்.
 
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.  
 
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும், பாசத்தையும் மேம்படுத்தும்.
 
ஏனெனில் அந்த வயதில் தான் அரவணைப்பும், பாதுகாப்பும் தேவைப்படும். இந்த சமயங்களில் தான் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுகளை எடுப்பார்கள். அப்போது அவர்களிடம் எது நல்லது, கெட்டது என்பதை எடுத்து கூற தோழியாக தாய் இருக்க வேண்டும்.
 
உங்கள் மகள் எந்த பிரச்சனையை கொண்டு வந்தாலும் அதை அன்புடனும், அரவணைப்புடனும் அந்த பிரச்சனையை தீர்க்க பாருங்கள். அதற்கு மாறாக அவர்களை திட்டினாலோ, தண்டிக்க நினைத்தாலோ அவர்கள் தவறாக முடிவுகளை எடுக்க தூண்டிவிடும். எனவே உங்கள் பெண்களில் டீன் - ஏஜ் வயதில் நீங்கள் பொறுமையும் கவனமாக இருக்க வேண்டும். 

No comments:

Post a Comment