விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர், விமானிகளின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் கொஞ்சம் அசந்தாலோ அல்லது கவனம் சிதறினாலோ ஏற்படும் விளைவை எண்ணிப் பார்த்தாலே நடுக்கம் ஏற்படுகிறது. ஆனால் விமானிகளில் பலர் அரைத் தூக்கத்தில் விமானம் ஓட்டுகிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆய்வு முடிவு அதைத்தான் சொல்கிறது.
ஆஸ்திரியா, ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒரு விமானிகள், நடுவானில் விமானம் கட்டுப்பாட்டுக்குள் வந்து சீராக சென்றுகொண்டிருக்கும்போது தூங்குவது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தில் நான்கு விமானிகள் காக்பிட்டில் (விமானிகள் அறை) இருக்கும்போது சோர்வை சமாளித்துக்கொண்டு இருக்கின்றனர்.
விமானிகள் சங்கமான ஐரோப்பிய காக்பிட் அசோசியேசன் வெளியிட்ட இந்த ஆய்வு முடிவில், பெரும்பாலான விமானிகள் விமானம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது அரைத் தூக்கத்திலோ அல்லது எழுப்பும் வரை முழு தூக்கத்திலோ இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகவலை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் நடத்திய ஆய்வில், 43 முதல் 54 சதவீத விமானிகள் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது சோர்வு காரணமாக தானாகவே தூங்கியதாகவும், சக விமானி எழுப்பும் வரை தூங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
2010 முதல் 2012-ம் ஆண்டு வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய விமானிகளிடம் நடத்தப்பட்ட இந்த சர்வே முடிவு வெளியான சில வாரங்களில், விமானத்தில் விமானிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், வேலை நேரம், ஓய்வு தேவை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு அதன் திட்டங்களை ஐரோப்பிய விமான பாதுகாப்பு ஏஜென்சி முன்மொழிந்துள்ளது
::::::::::::::::: மாலைமலர் ::::::::::::
No comments:
Post a Comment