களிமண் செங்கல், சிமெண்ட் செங்கல் கேள்விப்பட்டிருப்போம். அதை வைத்து வீடு கட்டியிருப்போம். ஆனால் திகிலூட்டும் வகையில் விலங்குகளின் ரத்தத்தை வைத்து புது மாதிரியான செங்கற்களை உற்பத்தி செய்துள்ளார் லண்டனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஒருவர். அவரின் இந்த விபரீத ஆராய்ச்சி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் ஜேக் மன்றோ வித விதமான செங்கற்களைப் பயன்படுத்தி கட்டிடங்களை வடிவமைப்பதில் நிபுணர். கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்தி சாதனை படைத்துள்ளார். 26 வயதே ஆன இந்த கட்டிடக்கலை நிபுணர் தற்போது சர்ச்சைக்குரிய, ஒரு செங்கல்லை தயாரித்துள்ளார்.
விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கி அதனுடன் மணலை கலந்து செங்கல் போன்று தயாரித்து, அவற்றை மின்அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைத்து பதப்படுத்துகிறார் ஜேக் மன்றோ.
ஒவ்வொரு ரத்த செங்கல் தயாரிப்பதற்கும் 35 லிட்டர் ரத்தத்தை பயன்படுத்துவதாக கூறுகிறார் ஜேக். இந்த செங்கல் தண்ணீர் புக முடியாத அளவுக்கு மிகவும் கெட்டியாக உள்ளது. இரும்பு கம்பிக்குப் பதில் இதனை பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைத்துறைப் படித்த ஜேக் இப்போது வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வருகிறார். தனது கண்டுபிடிப்பான ரத்த செங்கற்களைக் கொண்டு கொண்டு எகிப்தில் முன்மாதிரியான ஒரு கட்டுமானத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஜேக்.
இந்த செங்கற்களைகொண்டு வீடு கட்டினால் அதில் மக்கள் வசிக்க விரும்புவார்களா? என்று சந்தேகம் கிளப்பும் ஜேக், வளர்ச்சியடையாத வளர்ச்சியடையாத நாடுகளில் மண் கற்களுக்குப் பதில் ரத்த செற்கற்களை பயன்படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரத்தத்தை சூடாக்கி உருவாக்கிய இந்த சிவப்பு செங்கற்கள் பற்றி நினைத்தாலே பலருக்கும் அருவெருப்பு ஏற்படுவதோடு நிச்சயம் அச்சத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. ரத்தச் செங்கற்களைக் கொண்டு கட்டிய வீட்டில் இரவில் உறங்கும் போது கனவில் ரத்தம் ரத்தமாக வந்து அச்சுறுத்தினால் என்ன செய்வது?
thanks: Greynium Information Technologies Pvt. Ltd.
No comments:
Post a Comment