Monday, November 5, 2012

நமக்கு ஏற்படும் பசி உணர்வை குறைக்க சில ஆரோக்கியமான வழிகள்..!


இன்றைய அவசர காலத்தில் எதையும் சரியாக செய்ய முடியாத நிலையில் உள்ளோம். அதிலும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தான் நாம் நடந்து வருகிறோம். அதாவது உண்ணும் உணவை சரியாக உண்ணாமல், உடலை வருத்தி வருகிறோம். இல்லையெனில் உணவை அதிகம் உண்டு, பின் அதனால் உடல் எடை அதிகரிக்கிறது என்று வருந்தி, அதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
அவ்வாறு உணவை சரியாக உண்ணாமல் இருப்பதால், அடிக்கடி பசி ஏற்பட்டு, அடிக்கடி பசி எடுக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே அநத் நேரம் ஏதாவது ஒரு ஆரோக்கியமற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு, வராத நோய்களை வரவழைத்துக் கொண்டு பிற்காலத்தில் கஷ்டப்படுகிறோம். எனவே இந்த மாதிரியான நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், நமக்கு ஏற்படும் பசி உணர்வை குறைக்க சில ஆரோக்கியமான வழிகள் இருக்கின்றன. இந்த செயல்களை செய்தால், உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் எடை குறைந்து, பசியின்மையும் நீங்கும். இப்போது அந்த பசி வேதனையைக் குறைக்க உள்ள சிறந்த வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படும் உணர்வு தடுக்கப்படும். அதிலும் சிக்கன் மற்றும் மீனில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. மேலும் சைவ உணவுகளில் பீன்ஸ், பால் பொருட்கள், பாதாம் போன்றவை சிறந்தது.

சரியான உணவுகள்

சாப்பிடும் போது எந்த உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் பசி ஏற்படுகிறதென்றால், அப்போது பழங்கள், கலோரி குறைவாக பால் பொருட்கள், சூப் போன்றவற்றை சாப்பிட்டால், மேலும் பசிக்காமல் இருப்பதை தடுக்கலாம்.

கார உணவுகள்

உணவில் காரம் அதிகம் சேர்த்து சாப்பிட்டால், அது உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் வேகத்தை அதிகரித்து, பசி உணர்வை தடுக்கும். அதற்காக மிளகாய் தூளை அதிகம் சேர்த்து விட வேண்டாம். இவை செரிமான மண்டலத்திற்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியத்திற்கு 80% டயட் மற்றும் 20% உடற்பயிற்சி முக்கியமானது. அதற்காக சரியான அளவில் உணவை சாப்பிட்டாமல், உடல் பயிற்சியை மட்டும் செய்தால், அதிக அளவில் தான் பசி எடுக்கும். ஆனால் சரியான அளவில் உணவு உண்டு, உடற்பயிற்சி செய்தால், சரியான நேரத்திற்கு மட்டும் தான் பசி எடுக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நீர்ச்சத்து
உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இருந்தால், அடிக்கடி பசி எடுக்காது. ஆகவே தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை தாகத்தின் போது குடித்தால், பசி தணியும், எடையும் குறையும்.


உணவுகளை தவிர்த்தல்

காலை உணவை மறக்காமல் சாப்பிட்டு வந்தால், கண்ட நேரத்தில் பசி எடுக்காமல் இருக்கும். இல்லையெனில் அடிக்கடி பசி எடுத்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு, உடல் எடை அதிகரிக்கும். சொல்லப்போனால், சாப்பிடாமல் இருப்பது, உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியமான காரணம்.

நிதானமாக சாப்பிடுதல்

உணவு நன்கு சுவையோடு இருந்தால், அப்போது அந்த சுவையினால் அவசர அவசரமாக சாப்பிடுவோம். மேலும் அந்த நேரம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று அளவே தெரியாமல் சாப்பிடுவோம். அதுவே மெதுவாக மென்று சாப்பிட்டால், குறைவாக உண்பதோடு, உடல் எடையும் ஈஸியாக குறையும்.

நல்ல தூக்கம்

தூக்கமின்மையால் அதிக பசி எடுக்கும். ஏனெனில் சரியான தூக்கம் இல்லாவிட்டால், உடலில் உள்ள மெலாடொனின் ஹார்மோன் பசியை தூண்டும்.

thanks:    Greynium Information Technologies Pvt. Ltd.

No comments:

Post a Comment