உலகில் உள்ள அரிய வகை மற்றும் மிகவும் புகழ்பெற்ற வைரங்கங்களில் ஒன்றான ஆர்ச்டியூக் ஜோசப் என்ற இந்திய வைரம் ஏலத்திற்கு வருகிறது. ஆந்திர மாநிலம் கோல்கொண்டா சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட 76.02 கேரட் வைரமான ஆர்ச்டியூக் ஜோசப், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டீ ஏல நிறுவனத்தில் வரும் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட உள்ளது.
அப்போது இந்த வைரம் ரூ.82 கோடிக்கும் அதிகம் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த வெட்டு (கட்) வடிவம், நிறம் மற்றும் ஜொலிப்பு கொண்ட ஆர்ச்டியூக் ஜோசப், இதுவரை ஏலத்தில் விடப்பட்ட விலைமதிப்பற்ற வைரங்களில் ஒன்றாகும்.
கோல்கொண்டா சுரங்கத்தில் கோகினூர் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வைரங்கள் கிடைத்துள்ளன என்று கிறிஸ்டி ஏல நிறுவனத்தின் மூத்த நிபுணர் ஜீன்-மர்க் லூனல் தெரிவித்தார். இந்த வைரம் இதற்கு முன்பு ஹங்கேரி மன்னர் ஆர்ச்டியூக் ஜோசபிடம் இருந்தது. இதனால் அவரது பெயரை இந்த வைரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
:::::::நன்றி::::::மாலைமலர்:::::::
No comments:
Post a Comment