லண்டன்: பெண்களை சமையல்கட்டிலேயே போட்டு முடக்கி வைக்கும் கெட்ட பழக்கம் இந்த நாளிலும் கூட முழுமையாக போகவில்லை. பெண்கள் என்றாலே கிச்சன்தான் அவர்களது உலகம் என்று நினைக்கும் ஆண்கள் நிறையவே இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தங்களது வாழ்நாளில் சராசரியாக 3 ஆண்டுகளை பெண்கள் சமையல் அறையிலேயே கழிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு வருடத்தில் 18 நாட்களை ஒரு பெண் சமையல் அறையில் கழிக்கிறாராம். ஒட்டுமொத்த வாழ்க்கையில் சராசரியாக 1117 நாட்கள் அதாவது 3 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் அறையில் அவர் இருக்கிறாராம்.
18 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் பத்தில் 6 பேர் ஆண்கள் சமையல் அறையை நன்றாக நிர்வகிக்கிறார்கள், ஸ்டைலாக சமைக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனராம்.
அடுப்பு, சமையல்கட்டு, சாப்பாடு என்ற அளவிலேயே பெண்களைப் பார்த்து விட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் நிலை பெரிய அளவில் இன்னும் மாறவில்லை என்று இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பெரும்பாலான பெண்கள் இன்னும் சமையல் கட்டிலேயே உழன்று கொண்டிருப்பதாகவும் இது கூறுகிறது.
காலையில் சமைப்பது, மதிய சாப்பாடு, இரவுச் சாப்பாடு என்று ஒரு வாரத்தில் சராசரியாக 8 மணி நேரம் பெண்கள் சமையல் கட்டிலேயே இருக்கிறார்களாம்.
மொத்தம் 1000 தாய்மார்களிடம் இதுதொடர்பாக கருத்துக் கேட்டனர். ஒரு பெண் 63 வயது வரை வாழ்வதாக இருந்தால் அவர் சராசரியாக 1117 நாட்களை சமையல் அறையிலேயே கழிக்கிறார் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
சமையல் செய்வதற்கு மட்டும்தான் பெண்கள் சமையல் அறையில் இருப்பதில்லையாம். மாறாக ஓய்வெடுக்க நினைக்கும்போது கூட சமையல் அறையில் உட்கார்ந்தபடியே பேப்பர் படிக்கிறார்களாம். சிலர் வானொலி கேட்கிறார்களாம். அதாவது அவர்களுக்கே கூட சமையல் அறையை விட்டுப் பிரிந்து வர மனமில்லை என்று இந்த ஆய்வில் கலந்து கொண்ட பல பெண்கள் கூறியுள்ளனராம்.
தனியாக 2000 ஆண்களிடமும் சமையல் அறை குறித்து கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட 18 முதல் 34 வயது வரையிலான ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சமையல் அறையில் செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
சமையல் விஷயத்தில் பெண்களைப் போலவே ஆண்கள் பலருக்கும் கூட அதிக விருப்பம் இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்ததாம். அதிலும் பல ஆண்கள் பெண்களின் மனதைக் கவருவதற்காக சமைக்க விரும்புவதாக தெரிவித்தனராம்.
thanks:::::;Greynium Information Technologies Pvt. Ltd.::::::::
No comments:
Post a Comment