ஸ்டாக்ஹோல்ம்: ஸ்வீடனில் தாயின் கருப்பையை எடுத்து மகளுக்கு பொருத்தியுள்ளனர்.
ஸ்வீடனைச் சேர்ந்தவர்கள் டீனா, கேட்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). டீனாவுக்கு பிறப்பிலேயே கர்பப்பை இல்லை. கேட்டுக்கு புற்றுநோய் வந்ததால் கர்பப்பை அகற்றப்பட்டது. தாயாகும் ஆசை கொண்ட அந்த இருவருக்கும் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதாவது அவர்கள் இருவருக்கும் அவரவரது தாயின் கர்பப்பைகளை எடுத்து பொருத்தியுள்ளனர்.
தாயின் கர்ப்பப்பையை மகளுக்கு பொருத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. கோத்தன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் செய்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இனி டீனாவும், கேட்டும் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்தால் தான் இந்த சிகிச்சை முழுமையாக வெற்றிகரமானதா என்பது தெரிய வரும் என்று மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment