Friday, March 8, 2013

கூலி வேலை செய்த எழுத்தாளர்



ரஷ்ய ரயில்வே நிலையம் ஒன்றில் தாடியும் மீசையுமாக… லட்சணமின்றி நின்று கொண்டிருந்த ஒருவரைப் பெண் பயணி ஒருவர் அழைத்தார்.
” “ஐயா, என் கணவர் ஓட்டலுக்குச் சென்றுள்ளார். ரயில் புறப்படும் நேரமாகிவிட்டது. தயவு செய்து அவரை அழைத்து வாருங்கள். அதற்கான கூலியைத் தந்து விடுகிறேன்…” என்று கூறி கணவரின் அடையாளத்தையும் கூறினார்.
அந்த மனிதர் உடனே தயங்காமல் வெளியே சென்று, சிறிது நேரம் கழித்து அப் பெண்ணின் கணவரை அழைத்து வந்தார். சொன்னபடி அந்தப் பெண் கூலி தர, கொஞ்சமும் தயக்கமின்றி அதைப் பெற்றுக் கொண்டார்.
அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒருவர் அந்த அழுக்கான மனிதரைக் கட்டித் தழுவிக் கொண்டு, “ஐயா, புகழ்பெற்ற நூல்களை எழுதிய தாங்களா, கூலி வேலை செய்கிறீர்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
அந்த எழுத்தாளரின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அந்தப் பெண், “இவ்வளவு பெரிய எழுத்தாளரிடம் வேலை வாங்கிவிட்டோமே!” என்று வருந்தினார்.
அதற்கு அந்த எழுத்தாளர்,  “நீங்கள் வருத்தப்பட்டாலும், நீங்கள் கொடுத்த கூலியைத் திரும்பக் கேட்டால் தரமாட்டேன். ஏனென்றால் நான் வேலை செய்து சம்பாதித்த பணம் அது! அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம்…” என்றார்.
அந்த எழுத்தாளர் வேறு யாருமல்ல புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்தான்!                                                                                                                              ----------------------------                                                                                                                       நாற்சந்தி நன்றிகள் – தினமணி சிறுவர்மணி

மகளிர் தினம் கொண்டாடும் மகிமை பெண்கள் புரட்சியால் வந்த உரிமை




மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் 

உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று 

கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. 


இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது.  அந்த அளவுக்கு பெண்மைக்கு 

அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களை போற்றும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் 

தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நாள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது என்று தெரியுமா?  

1789 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது 

பாரீசில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற 

ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை ஆகியவற்றுக்காக அவர்கள் 

போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கையில் கிடைத்த ஆயுதங்களுடன் அவர்கள் பாரீஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாக கிளம்பிய பெண்களை துரும்பாக எண்ணிய 

அந்நாட்டு அரசன், அவர்களை தன் இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் எனவும் 

அறிவித்தான். ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள 

கோஷங்கள் வானைப் பிளக்க அரண்மனை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. 

அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரை திடீரென 

கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் 

சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களை சமாதானப்படுத்தினான். ஆனால், அவனால் வாக்குறுதிப்படி நடவடிக்கை 

எடுக்க முடியவில்லை. இதையடுத்து அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். 

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா 

தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் 

வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் 




கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை 

ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். 

அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8ம் தேதிதான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக 

அமைந்தது. இதேபோல், அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகரான நியூயார்க்கில், நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் 

பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் 

உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர்.
தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 

       

1908ல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். 

போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910ல் ஹேகனில் அனைத்துலக 

பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 

1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் 

பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். 

இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும் 

வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே 

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.

பதிவு செய்த நேரம்:2013-03-08 10:12:48



அப்பா என்ற அவதாரம்




வசந்த காலத்து வாசல் முனையில் என்னை விட்டு விட்டு கோடைகாலத்திலேயே தங்கி விட்ட என் தந்தையே! கண்கள் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்பவனை போல நீ இல்லாத நாளில் உன் அருமையை நினைத்து ஏங்குகிறேன். அம்மாவின் வயிற்றிலிருந்து வெளிவந்து விழுந்த என்னை தோள்மீது சுமந்தாயே! உன் சுருள்முடியை பற்றி கொண்டு என் பிஞ்சு கரத்தால் உன் முகத்தில் அறைந்த போதும் என் ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தம் கொடுத்தாயே! உன் பரந்த மார்பின் மீது ஏறி நின்று சங்கு சக்கர சாமி என்று குதித்து நான் ஆடிய போதும் என் குதிகால்களுக்கும் உதடுகளால் ஒத்தடம் கொடுத்தாயே! அத்தனையையும் நான் மறந்து போனது ஏன்?

வயல்காட்டு வரப்பின் மீது உன் விரல்பிடித்து நடப்பேன் இளகிய மண்ணிற்குள் என் இளம்பாதம் பதிந்து சேற்றை வாரி பூசியபோதும் உன் தோள்மீது என்னை உட்காரவைத்து என் கால் சேற்றை உன் கன்னத்தில் பூசிகொள்வாய் பறக்கும் தும்பியை பிடித்து வால்நுனியில் நூல்கட்டி பறக்க விட வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதற்கு நெருஞ்சி முட்கள் காலில் தைத்த போதும் ஒற்றை கையால் முள்ளை பிடுங்கி எரிந்து விட்டு தும்பி பிடிக்க தாவி நடப்பாய் கிடைத்த தும்பியையும் விட்டு விட்டு அடுத்த தும்பி வேண்டுமென்று அடம்பிடித்து நான் அழுதாலும் அதட்டலாக எதுவும் பேசாமல் என் ஆசையை தீர்க்க எத்தனிப்பாய்.

வெள்ளிகிழமை சந்தைக்கு நீ போய்விட்டு நடுசாமத்தில் வந்தாலும் தூங்கும் என்னை எழுப்பி உட்கார வைத்து இனிப்பு மிட்டாயை வாயில் திணிப்பாய் ஊரெல்லாம் சுற்றி ஓடி ஓய்ந்து போய் வீட்டுக்கு வந்து உண்ணாமல் குடிக்காமல் உறங்கி நான் போனால் அம்மா உருட்டி தரும் சாத உருண்டையை மடியில் என்னை சாத்தி கொண்டு கைநிறைய நீ எனக்கு ஊட்டி விடுவாய். உறக்கத்தில் நான் உன் வேஷ்டியில் சிறு நீர் கழித்தால் கூட ஆடை மாற்றாமல் என்னை சுத்தம் செய்வாய் சித்திரை மாதத்து கொடும் வெயில் புழுக்கத்தில் தூக்கம் வராமல் நான் நெளிந்து நெளிந்து படுத்தால் விடியும் வரைக்கும் விழித்திருந்து விசிறியால் காற்று வீசுவாய் ரோமங்கள் அடர்ந்த உன் மார்பில் என்னை சாய்த்து கொண்டு தட்டி கொடுப்பாய்.

மணலில் விரல்பிடித்து அச்சரம் எழுத துவங்கினால் என் விரல் கன்றி போய்விடுமென்று தவிட்டின் மீது எனக்கு எழுத சொல்லி கொடுத்தாய் பள்ளிக்கூடம் சென்று கற்க முடியாத பாடங்களை கிணற்று மேட்டில் என்னை உட்க்கார வைத்து தினசரி போதிப்பாய் ராபர்ட் கிளைவையும், கஜினி முகமதுவையும் மட்டுமே சொல்லி தந்த பாடபுத்தகங்களை தாண்டி விக்கிரமாதித்தனையும் வீர சிவாஜியையும் நீயே எனக்கு அறிமுகம் செய்தாய் வகுத்தல் கூட்டல் கணக்குகளை தாண்டி வாழ்க்கை கணக்கை வழிபிரளாமல் வகுத்துக்கொள்ள வழியும் சொன்னாய்.

கலித்தொகை தொடங்கி அகநானூறு வரையிலும் இலக்கிய சாரளத்தையும் எனக்கு காட்டினாய் எழுத்து கூட்டி வாசிக்க தெரியாத என்னை கவிதைகள் படைக்க ஆர்வமூட்டினாய் நான் எழுதி கொடுத்த வார்த்தை கிறுக்கல்களை முதல்முதலாக படித்து பேஷ் பேஷ் என தட்டி கொடுத்தாய். திக்கி திணறி பேசவே தயங்கும் என்னை மேடையில் ஏற்றி பேசவைத்து கைகளை தட்டினாய்

மருத்துவன் காட்டிய பத்திய உணவை தினமும் தின்று நாக்கு செத்து போன போது உச்சி வெயிலில் தோள்களில் என்னை சுமந்து கொண்டு அறுசுவை உணவை நான் அருந்தி பார்க்க பர்லாங்கு தூரம் நடந்து செல்வாய். எனது கற்பனை சிறகுகள் விரிந்து பறக்க பலவண்ண ஓவியங்களையும் உருவ பொம்மைகளையும் பரிசாக கொடுப்ப்பாய். ஒரு சிற்பி எப்படி சிலையை செதுக்குவானோ அப்படி என்னை செதுக்கி பார்த்த என் ஞான தந்தையே! எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பெற்ற நான் உனக்கு தந்தது என்ன? உச்சி கால வேளையிலும் நிலா உலா வரும் பொழுதிலும் எண்ணி பார்க்கிறேன் எண்ணி கொண்டே இருக்கிறேன். உனக்கு தந்தது என்னவென்று இன்னும் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.

மரங்கள் வந்து பாராட்டும் என்றா மேகம் மழையை தருகிறது? வண்டுகள் வந்து சாமரம் வீசும் என்றா மலர்கள் தேனை தருகிறது?. மீன்கள் கூடி கால்பிடித்து விடும் என்றா நதி நீரை தருகிறது? சூரியனும் சந்திரனும் வெளிச்சம் தருவது பூமியின் பாராட்டு வார்தைகளுக்காகவா? நீ பாலை வனத்தில் மழையை தந்த மேகம்!. மதுவை பிரதிபலன் பார்க்காமல் வாரி வழங்கும் மலர்! தாகம் தனிப்பதற்கென்றே அவதாரம் எடுத்த நதி! உயிரை வாழவைக்கும் ஆதவ மதி!.

ஏனோ தெரியவில்லை காலகாலமாக அம்மாவை மட்டுமே புகழ்கின்ற நாக்குகள் தகப்பனின் தியாகத்தை கண்டுகொள்வதில்லை தனது பிள்ளைகளின் உடல் நோகாமல் பாதுகாக்கும் பஞ்சு மெத்தைகளாக அப்பாமார்கள் அனைவரும் கட்டிலில் மீது அசையாமல் கிடக்கிறார்கள். சுடும் மணலில் தனது கால்களை புதைத்து உடலில் நிழலை பிள்ளைகளுக்கு கொடுத்து கால வெயிலில் பொசுங்கி கிடக்கிறார்கள். அம்மா கொடுத்த ரத்தம் வளர்ந்து செழிப்பதற்கு அப்பா கொடுக்கும் தழை உரம் ஏனோ அங்கிகாரம் இல்லாமல் மூலையில் கிடைக்கிறது.

அறிஞர்களின் அறிவும் தியாகிகளின் தியாகமும் அவர்கள் காலத்திற்கு பிறகு தான் கவனத்திற்கு வருமாம் அதே போலவே என் தந்தையே! நீ இல்லாத போது நீ கொடுத்த நிழலின் அருமை தெரிகிறது.நீ ஓடிய உழைப்பின் பெருமை புரிகிறது. நீ வாழ்ந்த காலத்தில் ஒரு சிறிய துண்டு துணியை கூட கொடுக்காத என்னை வாழ்த்தி நின்றாயே அந்த அர்ப்பணமே நீயே இறைவன் என்று எனக்கு அடையாளம் காட்டுகிறது. என்ன செய்வது கடவுளை நாங்கள் சிலைகளாகவே பார்க்கிறோம்.
 

http://www.ujiladevi.in/

Thursday, March 7, 2013

அங்காடித் தெரு கடையின் பெண்களின் தின வாழ்க்கை..


சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி.அதிகக் கூட்டம் இல்லை. நாள்முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்தசிறு புன்னகையுடன் துணிகளைஎடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.
-
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘திருநெல்வேலிக ாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல.. ’’
‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப்போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’
-
‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கு வரணும்.நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’-
‘‘சாப்பாடு?’’
‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’
‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’
‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணேன் . நாள் முழுக்க நின்னுகிட்டேஇருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’
-
- யாரோ ஒரு வாடிக்கையாளருடன ் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையு ம் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும் . அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.
‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500 ரூபாய்.’’
‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’
‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’
‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ.எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’ ’
-
‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’ ’
‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாத ான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான். ’’-
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங ்க.’’
‘‘பிடிச்சுக்குவ ாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங ்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’
‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவைஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’
-
‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘உங்களுக்கு விலை குறைச்சுதரமாட்டாங்களா?’ ’
‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘தெரியலை..’’
‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘நெல் விவசாயம்..’’
‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டுவேலைப் பார்க்குறதுக்கு ப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையில ேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’
‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’
‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’
-
‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங ்களா?’’
‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’
- கனத்த மனதுடன் அந்தப் பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சிஎழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.

-----------------------------------------------------
ரிலாக்ஸ் ப்ளீஸ்

பெண்மை எப்படி மலர்கிறது?




சிறுமிகள் பொதுவாக 11 முதல் 13 வயதுக்குள் பூப்படைந்துவிடுவார்கள்.
சிலர் இந்த வயதைக் கடந்தும் பருவம் எய்துவதுண்டு. பெண் பருவம் அடைவது என்பது ஒரு சில நாட்களில் ஏற்படும் நிகழ்வு அல்ல.
பல ஆண்டுகளாக உடலில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களால் படிப் படியாய் பெண்களின் உடல் இந்த வளர்ச்சி நிலையை எட்டுகிறது.
ஒரு சிறுமியை குமரியாக்கும் அத்தனை அம்சங்களும் அவள் இனப்பெருக்க உறுப்புகளில்தான் இருக்கின்றன.
அதிசயமும், ஆச்சரியமும் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்புகளில் உள் உறுப்புகளாக அமைந்திருக்கும் கருப்பை, கருக்குழாய், சினைப்பை, சினைமுட்டை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கருப்பை என்பது தசையால் அமைந்த உறுப்பு.
இதன் மொத்த நீளம் 7.8 செ.மீ! பருமன் 3.4 செ.மீ! இதன் மேல் பக்கம் அகலமாக இருக்கும்.


கருப்பை கழுத்து எனப்படும் கீழ்ப் பகுதி குறுகியிருக்கும். நடுப்பகுதி மையோமெட்ரியம் எனப்படும்.
கருப்பையில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மேல் பகுதி திறப்புகள் கருப்பை குழாய்களோடு இணைந்திருக்கின்றன.
கீழ்ப்பகுதித் திறப்பு கருப்பைக் கழுத்துடன் இணைந்திருக்கிறது.
கருப்பையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக சுமார் பத்து செ. மீ. நீளத்தில் இரண்டு கருக் குழாய்கள் உள்ளன.
குழாயின் கடைசிப் பகுதி சினைப் பையை நோக்கி வாய் போலத் திறந்து வளைந்திருக்கும்.
இந்த வழியாகத்தான் சினை முட்டை கருப்பையை நோக்கி நகரும்.
கருப்பையின் பின்னால், கருக்குழாயின் வெளிநுனிப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சினைப்பைகள் உள்ளன.
இவை தலா சுமார் 6கிராம் எடைகொண்டவை .


சிறுமியாக இருக்கும்போது வழவழப்பாகத் தோன்றும் சினைப்பைகள், அவள் பருவத்தை அடையும் போது மேடு, பள்ளம் கொண்டதாக மாறுகிறது.
இந்த பைகளில் பல லட்சம் சினை முட்டைகள் இருக்கும்.
ஆனால் அதில் ஒரு பெண் அதிகபட்சமாக தன் வாழ்நாள் முழுவதும் 500 சினை முட்டைகளைதான் வெளியேற்றுவார்.
பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள், இயக்கங்கள், தூண்டுதல்கள் அனைத்திற்கும் ஹார்மோன்களே மூல காரணங்களாக இருக்கின்றன.
ஹார்மோன்களுக்கே தலைபோல் விளங்குவது, பிட்யூட்டரி என்ற சுரப்பி.
இதை மூளையில் உள்ள தலாமஸ் என்ற பகுதி கட்டுப்படுத் துகிறது.
இது நேரடியாகவும், மற்ற சுரப்பிகளை ஊக்குவித்தும் உடலை இயங்கச்செய்கிறது.
பெண் பூப்படையும் காலத்தில் ஹார்மோன்கள் துரிதமாக செயல்பட ஆரம் பிக்கும்.


மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோனை சுரக்கச்செய்து சினைப்பைகளுக்கு அனுப்பும்.
சினைமுட்டைகளைத் தூண்டி முதிர் வடையச்செய்யும். இன்னொரு ஹார்மோன் முதிர்ந்த முட்டையை வெளியிடச்செய்யும்.
பூப்படையும் பருவத்தில் பெண்ணுக்கு ஈஸ்ட் ரோஜென் ஹார்மோன் சுரக்கிறது.
இதனால்தான் மார்பகங்கள் வளர்ந்து, பெரிதாகிறது.
இடுப்பிலும், பின்பகுதியிலும் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களையும் இந்த ஹார்மோன் உருவாக்குகிறது.
ஒரு பெண் 16 வயது வரை பூப் பெய்தவில்லை என்றால் அதற்கு ஹார்மோன்களின் செயல்பாட்டுக் குறைவு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.


கருப்பை, அண்ணீ கச்சுரப்பி, சினைப்பை, பிறப்பு உறுப்பு பாதை போன்றவைகளில் ஏற்படும் நோய்களாலும் பூப்படைவது தாமதமாகலாம்.
கருப்பை, சினைப்பை போன்றவை பிறவியிலே இல்லாத பெண்கள் பூப்படைய மாட்டார்கள்.
சில பெண்களுக்கு உடலுக்குள் பூப்படைந்ததற்கான அறிகுறிகள் இருக்கும்.
ஆனால் மாதவிலக்கு உதிரம் வெளி யேற முடியாத நிலை ஏற்படும். இதை கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்து சரி செய்திடலாம்.
16 வயதுக்குப் பிறகும் பூப்ப டையாத பெண்கள், மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.
அவர்களுக்கு அதிகமாக கால்களில் வியர்த்தல், தலை மற்றும் மார்பகத்தில் திசு தளர்ச்சி, நுரையீரல் தொடர்புடைய நோய்கள், உடல் குண்டாக இருத்தல் போன்ற பாதிப்புகள் இருக்கலாம்.
மேலும் வயிற்றில் அதிக அமிலச்சுரப்பு, இதயத்தில் எப்போதும் படபடப்பு, அதிகமாக மூச்சு வாங்குதல் போன்ற குறைபாடுகளும் இருக்கலாம்.
உடல் பலகீனம், ரத்த சோகை, காலையில் பாதம் வீங்குதல்- மாலையில் கணுக்காலில் வீங்குதல் போன்ற கோளாறு கொண்ட பெண்களும் பூப்படைவது தாமதமாகும்.


காரணம் கண்டுபிடிக்கப்ப ட்டு, சரியான சிகிச்சை பெறுவதன்மூலம் பூப்படைதல் சாத்தியமாகும்.

 
- மருத்துவர் கே.எஸ்.ஜெயராணி. மாலைமலர்

இப்படியும் சில உள்ளங்கள்!!!




நண்பர் ஒருவரின் அனுபவத்தை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்,..
நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவை சுற்றி நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தேன் .திடிரென பெரிய மழை ...பூங்கா உள்ளே ஒரு சிறிய ரூம் இருக்கிறது ...ஆனால் அது மூடி இருக்கும் .அதன் வாசலில் ஒதுங்கலாம் என்று உள்ளே சென்றேன் ...அதன் வாசலில் இரண்டு பெரியவர்கள் ,இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டு இருந்தனர் ...பக்கத்தில் இருந்த மரத்தடியில் ஒதுங்கினேன் .சிறுவன் யாருக்கோ போன் செய்தான் ...சற்று நேரத்தில் அவனது தாயார் குடையுடன் வந்தார் .அவனும். அவன் நண்பனும் அந்த அம்மாவுடன் புறப்பட்டனர் ..

...போகும்போது அந்த பையன் .அந்த பெரியவர்களையும், என்னையும் பார்த்துகொண்டே போனான் .சிறிது நேரம் கழித்து அந்த சிறுவன் மேலும் இரண்டு குடையுடன் வந்தான் ...அந்த பெரியவர்களிடம் கொடுத்து "இதை வச்சுகங்க தாத்தா ...நாளைக்கு வரும்போது திருப்பி கொடுங்க" என்றான் .அந்த பெரிவர்களோ "இல்ல தம்பி நாங்க மயிலாப்பூர்...எப்போவாவதுதான் இங்க அசோக் நகர் வருவோம் " என்றனர்.இந்த பையனும் "பரவாயில்லை நீங்க வரும் போது கொடுங்க நான் இங்க தான் விளையாடிகிட்டு இருப்பேன்" என்று சொல்லி கொடையை கொடுத்தான் .என்னிடம் வந்து " uncle...இந்தாங்க குடை ...இதை வச்சுக்குங்க ...நாளைக்கு
walking வரும்போது கொடுங்க ...இல்லனா கூட உங்க வீடு எனக்கு தெரியும் நானே வந்து வாங்கிக்கிறேன் ." என்று கையில் குடையை கொடுத்துவிட்டு வேகமாக போய்விட்டான் . நான் குடையை விரிக்கவில்லை .அந்த பையனின் பெருந்தன்மை விரிந்தது .நானாவது அதே தெருவில் வசிப்பவன் ...ஆனால் அந்தப் பெரியவர்கள் யார் என்றே அவனுக்கு தெரியாது ...ஆனாலும் ரொம்ப நேரம் மழையில் நனைகிறார்களே...இவர்கள் எப்படி வீட்டுக்கு போவார்கள் என்று நினைத்து அவர்களுக்கு குடையை கொடுத்தானே அதை நினைத்து பார்த்தேன் .அவனை பாராட்டுவதா ...? இல்லை அவனை பெற்றவர்களை பாராட்டுவதா ...? என்று தெரியவில்லை ...


மழை நின்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ...ஆனால் அந்த சிறுவனின் அன்பு மழை மட்டும் இன்னமும் அடைமழையாய் நெஞ்சில்.....


செந்தில்குமார்