நம்மிலும் அதிகமாய்
நம்மைத்தெரிந்தவர்களாய்
பக்கத்துவீட்டுக்காரர்களே
இருக்கிறார்கள்....!!!
திருமணங்களின் போது
மணமக்கள் மீதான நம்பிக்கைகளை
பக்கத்து வீடுகள்தான் தருகின்றன....!
ஊருக்குள் எது நடந்தாலும்...
சுவாரசியம் பிசகாமல்;
சுடச் சுடச்சேதி சொல்வதில்....;
நாலு சுவருக்குள் முடிந்த
நம் வீட்டுச் சண்டைகளை....
தெருவெல்லாம் நாறடிப்பதில்....
பக்கத்துவீடுகள்தான்;
காலம் காலமாய்...
முதலிடத்திலிருக்கின்றன...!!!
''அவன் என்னமா கொழுத்திருக்கான்....''
நீயும் இருக்கியே ; ஒல்லிக்குச்சி.....!!''
''அவள் என்னமா படிக்கிறாள் ''
'நீ.......??? கழுத...கழுத....!!!' - என
வாழ்க்கை நெடிகிலுமான ஒப்பீடுகள்
பக்கத்துவீட்டோடுதான்
எப்போதும் நடக்கின்றன....!!!
கடையைப்புரட்டி...
காசைக்கொட்டி...
வாங்கிய சேலை;
வடிவாய்த்தானிருந்தது....!
பக்கத்து வீட்டுக்காரியின்
சேலையைப் பார்க்கும்வரை....!!!
செத்துப்போனவன்...
பிணவாடை அடிக்கிறவரை...
பக்கத்துவீட்டுச் சங்கதிகள்....
யாருக்கும் தெரிவதில்லை- மேலை நாடுகளில் !!!
நம் சின்ன அழுகுரலில்
ஊரே திரளும்....
உதவிக்கு ஓடும் - நமது வீடுகளில்...!!!
என்ன நடக்குது....
யார் வருகிறார்கள்....????
ம்ம்...இன்றைக்கு மீன் கறி - என
பலரின் அகழ்வாராய்ச்சி..
பக்கத்து வீடுகளுக்குள்தான.!
வீட்டோடு உடம்பு .......
காதும் கண்களும்;
அடுத்தவன் வீட்டுக்குள் மேய்ந்தபடி.....!
எது எப்படியோ;
எவருக்கும் தெரிவதில்லை...!
வேடிக்கை எனும் பெயரில்
இவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது
பக்கத்து வீட்டானின் வாழ்க்கை என....!!!!
வாழாமலும் ,வளராமலும்
பாழ்பட்டுக் கிடக்கிறது.........
இவர்களுக்கான வாழ்க்கை....!!!!
No comments:
Post a Comment