Tuesday, January 15, 2013

ஆங்கில மாதங்களின் பெயர்ப் பின்னணி!






னவரி (ஜண்யுவரி)
ஜனுயேரியஸ் என்பது லத்தீன் சொல். அதில் இருந்து பிறந்தது ஜனுயுவரி. ஜனுஸ் என்னும் ரோமானியக் கடவுளின் மாதம் என்பது இதன்பொருள்.

பிப்ரவரி (பெப்ருவரி)
தூய்மையாக்கல் என்ற பொருள்கொண்ட இலத்தீன் சொல்லான ஃபெப்ருயேரியஸ் என்பதிலிருந்து இது பிறந்தது. பிப்ரவரி மாதம் பதினைந்தாம் நாள் தங்களைத் தூய்மையாக்கிக் கொள்வதற்காக விழா கொண்டாடி வந்தார்கள்.

மார்ச்
மார்ஸ் என்ற ரோமானியப் போர்க் கடவுளுக்கு உரிய மாதம் என்ற பொருளில் மார்ச்பெயர் தோன்றியது.

ஏப்ரல்
ஏப்பெரைர் என்பது லத்தீன் சொல். துவக்கம் என்று அதற்குப் பொருள். பண்டைக் காலத்தில் ரோமானியர் ஏப்ரல் மாதத்தை ஆண்டின் துவக்கமாகக் கொண்டார்கள். ஏப்பெரைர் என்பதிலிருந்து ஏப்ரிலிஸ் வந்து பின்னர் அது ஏப்ரல் ஆயிற்று. ரோமில் காலண்டர் கணிக்கப்பட்டபோதுமார்ச் ஆண்டின் துவக்க மாதமாயிற்று.

மே
மெர்க்குரி என்ற ரோமானியக்கடவுளின் தாய் மேய்யா என்ற தேவதை. அந்தப் பெயரிலிருந்து மே பிறந்தது.மேய்யா என்பது வளர்ச்சிப் பெருக்கத்தின் தேவதையாகப் போற்றப்பட்டது.

ஜூன்
ஜூனோ என்பது இளமை அறிகுறியின் தேவதையின் பெயர். அதிலிருந்து ஜூன் பிறந்தது.

ஜூலை
ஜூலியஸ் சீசர் பிறந்த மாதத்தை அவர் நினைவாக ஜூலை என்றழைக்கப்படுகிறது. ஜூலியஸ் சீசரே தம் பெயரைத் தாம் பிறந்த மாதத்துக்கு வைத்தார்.

ஆகஸ்ட்
ரோமானியச் சக்ரவர்த்தி அகஸ்ட்டஸ் சீசர். அவரைக் கெüரவிக்க ஒரு மாதத்துக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது.

செப்டம்பர்
செப்டம்பர் என்றால் ரோமானிய மொழியில் ஏழு என்றுபொருள். ரோமானிய காலண்டரின்படி மார்ச்சிலிருந்து ஏழாவது மாதம் செப்டம்பர்.

அக்டோபர்
ரோமானிய மொழியில் அக்டோ என்ற சொல்லுக்கு எட்டு என்று பொருள். எனவே எட்டாவது மாதம் அக்டோபர் ஆயிற்று.

நவம்பர்
நவெம் என்பது ரோமானிய மொழியில் ஒன்பது என்ற பொருளைத் தரும். எனவே ஒன்பதாவது மாதம் நவம்பர் ஆயிற்று.

டிசம்பர்
டிசெம் என்றால் ரோமானிய மொழியில் பத்து என்று அர்த்தம். எனவே ரோமானியக் காலண்டரின் படி பத்தாவது மாதம் டிசம்பர் ஆயிற்று.

--------------------------------------------------
நன்றி : தினமணி

No comments:

Post a Comment