நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல...
நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல..வாழ்வில் ஒவ்வோரு வினாடியும் நாம் வாழ போரடுகிறோம் ..
ஒரு சாதாரண நிகழ்வு சுவாசித்தல்..அதற்கு கூட வெளியில் இருக்கும் காற்றை உள்ளே அனுப்ப போராடுகிறொம்..
ஒரு தினத்தில் ஒவ்வொரு நிமிடமும் நம்மை பார்த்து பார்த்து செதுக்குகிறது.
இந்த உலகை பார்க்கவே நீ வெளிவர உனக்கும் வெளி தள்ள உன் அம்மாவுக்குமான இடுப்பெலும்பு கோட்டையின் போரில் வென்று தானே உலகை பார்த்தாய்..பின் ஏன் சோர்ந்து போகிறாய்?..
இந்த உலகம் மாற்றம் நிறைந்தது ..நேற்றைய குழந்தை இன்றும் குழந்தையாக இருப்பதில்லையே..வாழ்க்கையும் அப்படி தான் ,மாற்றம் எனும் வார்த்தை தவிர அனைத்துமே மாற கூடியதே...
நாட்கள் செல்ல செல்ல உன் இலக்குகள் அதிகரிக்க வேண்டும்..உன் எல்லைகள் வரையறுக்க பட வேண்டும் ..
ஆலமரம் ஒரு போதும் தன் விதைகள் சிறிதாக இருப்பதற்கு கவலை பட்ட்து கிடையாது...தான் ஒரு பெரிய விருக்ஷம் என கர்வபட்ட்தும் கிடையாது..
உனக்குள் ஆல மர விதை போன்ற அன்பு ஒளிந்து கிடக்கிறது ..நீ மட்டும் அன்பை வளர்த்து பார்...
ஒரு நாள் இந்த உலகில் விருக்ஷமாக வியாபித்து நிற்பாய்..உன் அன்பெனும் கிளையில் ஆயிரமாயிரம் கிளிகள்,புறாக்கள்,இன்னும் எத்தனையோ ஜீவன்கள் உன் அடைக்கலத்தில் வாழ்ந்திருக்கும்..
வாழ்வில் ஒரு நியதி உண்டு ..எப்போதும் ஒரு நல்ல தரமான விதை ஒரு பாறை இடுக்கில் விழுந்தால் கூட எப்படியாவது கற்றின் ஈரம் எடுத்து மண் துகள் சேகரித்து சில நாட்களில் வேர் விட்டு விடும் ..
.ஆனால் ஒரு தரமற்ற விதை எத்துணை பண்படுத்தப்பட்ட தரமான விளை நிலத்தில் கூட துளிர் விடாமல் வீணாகி போய் விடுகிறது...நீ ஒரு தரமான விதை..இந்த சமூகத்தில்...ஒரு போதும் வீணாகி போய் விட கூடாது...
ஒவ்வோரு தடைகளையும் உன் படிகற்களாக்கி உன் பாதையை வகுத்து கொள்...உன் வானம் உன் கைக்கு எட்டும் தூரத்தில் தான்..நிலவை கூட நீ எட்டி பிடிக்கலாம்... நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல..
பொய்யான போதையில் உன் மெய்யான பாதையை தொலைக்காதே..நம்பிக்கை மட்டும் தான் வாழ்க்கையை நடத்துகிறது.நாளைய தினம் எப்படி என நமக்கு தெரியாததால் மட்டுமெ வாழ்வு சுவாரஸ்யம் மிகுந்த்தாகி போய் விடுகிறது..
வாழ்வே நாம் பார்க்கும் கோணத்தில் தான் அமைகிறது..எனவே உன் வாழ்க்கை உன் கையில்... ஒவ்வோரு தடைகளையும் உன் படிகற்களாக்கி உன் பாதையை வகுத்து கொள்.. ..வெற்றி உன் இலக்கு..சாதனை புத்தகத்தில் உன் பெயரை தலைப்பாக்கு.. நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல...
::::எழுத்து இணையம் :::
No comments:
Post a Comment